வெள்ளி, 4 நவம்பர், 2016

என் இரண்டாவது பெண் சௌரபியின் ஆண்டுநிறைவு பாடல் - .வெண்ணிலவே! வெண்ணிலவே!..

கண்மணியே, பொன்மணியே......
கட்டித்தங்க ராஜாவே.....
பட்டுத் தாமரைப் பூச்செண்டே! - அந்த
ஆகாயத்தில் மின்னும் நட்சத்திரம் கொண்டு
பிரம்மன் உன்னைப் படைத்தான்!
                                                            (கண்மணியே! பொன்மணியே!)

இந்தப் பொன்னாளில் உங்கள் அன்னை நான்
எந்தன் முத்தான ஆசைகள் சொல்லிடுவேன்!
ரெண்டு ரோஜாக்கள் தந்த இறைவனுக்கு
ஆயிரம் நன்றிகள் சொல்லிடுவேன்!
கண்ணே! பொன்னே!
பாடங்கள் படித்தே நீ                    
பட்டங்கள் பெற வேண்டும்..  
பாட்டுக்கள், ஆட்டங்கள்
பரிசுகள் பெறவேண்டும்!
உலகத்து கலைகள் அனைத்திலும் தேர்ந்து
ஜோராய் நீ விளங்கவேண்டும்!
                                                            (கண்மணியே, பொன்மணியே!)

பாரெங்கும் பறந்தே நீ
பூவாய் சிரிக்க வேண்டும்!
பேரோடும் புகழோடும்
பண்பாய் இருக்க வேண்டும்!
அதை எண்ணி எண்ணி...
கனவினில் மிதக்கிறேன்.
                         (பாரெங்கும்)
கண்ணே!.... பொன்னே!.....
பூலோகம் எங்கெங்கும்
தேடித் பார்த்த பின்னும்
கும்பகோணம் sisters போல்
எங்கும் இல்லை என்றே
உலகினில் அனைவரும்
உங்களை என்றும் பாராட்ட வேண்டும் அம்மா!
                                                                (கண்மணியே, பொன்மணியே)