செவ்வாய், 17 ஜூலை, 2018

'நான்'


'நான்' - எனில்
நான்தான் என்றிருந்தேன்.

'நான்' - எனில்
நானேதான் என்றிருந்தேன். 

'நான்' - எனில்
நான்தானே என்றுகூட இருந்தேன்.

பின்
'நான்' - எனில்
எனைச் சுற்றியுள்ள 
ஏனையோருமோ என்றிருந்தேன்.

'நான்'
நானே இல்லாமல் 
மற்றவராய் மாறிப்போனேனோ
என்றிருந்தேன்.

ஆனால்-
என் உடல் உபாதைகளுக்கு,
எவருமே
உடந்தையோ-
உடன்படவோ-
உணர்ந்துகொள்ளவோ
இல்லை யெனும்போது
'நான்' எனில்
நான்தான்!
நானேதான்!.....
நான்தானே!

புதன், 4 ஜூலை, 2018

கரண்டி யுத்தம் - மைசூர்பாகா! ஜாங்கிரியா

Image result for image of mysore pak in one stove and melting ghee in another stove

முறுக்கிக்கொண்டு முருகன் சேர்ந்த இடம்தான் பழனி!
முறுகிப்போன இப்பதார்த்தம் சேரும் இடமோ கழுநீர்!

வாயில் போட்டால் மெல்லக் கரைந்திடும் இப்பண்டம்
பாகு முறிந்து போனாலோ பரிகாசம்தான் பண்ணும்!

பல்லைப் பதம் பார்த்து 'பாறாங்கல்' பட்டம் பெறும்!
கைதவறி காலில் விழ 'கருங்கல்' என்றே கரிக்கப்படும்!

தூளாகிப் பொடிபொடியாய் அள்ளி எடுக்க வைக்கும்!
நெய்யை நிறைய குடித்துவிட்டும் நையாண்டித் தனம் செய்யும்!

தண்ணி(தண்ணீர்) காட்டி (காட்ட) சண்டிபண்ணும்
ராங்கிக்காரிதான் இந்த  மைசூர்பாகு 

மங்கள ஹாரத்தி, நமஸ்காரம் செய்கின்றோம்

                                                  மங்கள ஹாரத்தி

ஆரத்தி எடுத்திடுவோம்.. மஹாதீப ஆரத்தி எடுத்திடுவோம்.
ஆரத்தி எடுத்திடுவோம்.... மங்கள ஆரத்தி எடுத்திடுவோம்.

மூஷிக வாகன கணபதிக்கும், கலைவாணி சரஸ்வதிக்கும்,
சரவண பவகுஹ முருகனுக்கும், ஸ்ரீ சரவண பவ குஹ முருகனுக்கும்,
நாம் ஆரத்தி எடுத்திடுவோம்.

உமா மஹேச்வரன் பார்வதிக்கும் ஸ்ரீ ஜானகிராமனுக்கும்
ராதா ருக்மிணி கிருஷ்ணனுக்கும், பாண்டுரங்க விட்டலனுக்கும்,
நாம் ஆரத்தி எடுத்திடுவோம்.

நாராயாணன் மஹாலக்ஷ்மிக்கும், ஐயப்பன் சத்குரு நாதனுக்கும்,
சமஸ்த தேவதா மூர்த்திகளுக்கும், ஜயவீர தீர ஹனுமானுக்கும்,
ஜயவீரதீர ஹனுமானுக்கும், நாம் ஆரத்தி எடுத்திடுவோம்.

ஹாரத்தி எடுத்திடுவோம்.. மஹாதீப ஆரத்தி எடுத்திடுவோம்
ஹாரத்தி எடுத்திடுவோம்... மங்கள ஆரத்தி எடுத்திடுவோம்.


                                        நமஸ்காரம் செய்கின்றோம்

கோயில் முன்னே கூடி நின்று கோடி ஜன்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்.

திருமேனி தரிசனம் நிர்மால்யமாகவே கண்டு,
கிரிதரன் உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

சந்தனக் காப்பு கழற்றி தைலம் பூசிக்கொண்டு நிற்கும்,
நந்த கோபாலா... நமஸ்காரம் செய்கின்றோம்.

எண்ணை ஸ்நானம் செய்து கையில் வாழைப்பழத்தோடே நிற்கும்
கண்ணனின் பாதத்தில் நமஸ்காரம் செய்கின்றோம்.

குடம் குடமாய்ப் பாலை அபிஷேகம் செய்யும் வேளை
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்.

கொண்டை மயில் பீலி மின்ன மஞ்சள் பட்டு கட்டிக்கொண்டு,
குழலூதும் கிருஷ்ணா நமஸ்காரம் செய்கின்றோம்.

தெச்சி மந்தாரம் துளசி, தாமரைப்பூ மாலை சத்தி,
அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்.

திவ்ய நாமம் சொல்லிக்கொண்டு சீவேலியில் சுற்றி வந்து
ஸ்ரீதரா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்.

தீராவினை தீர்த்து வைத்து கோரும் வரம் அளித்திடும்
நாராயணா..... நமஸ்காரம் செய்கின்றோம்.