வெள்ளி, 29 ஏப்ரல், 2016

சித்தப்பாவிற்கு ஒரு கடிதம்

அன்புமிகு சித்தப்பாவிற்கு -அடியேனின்
ஆசைமிகு நமஸ்காரங்கள்.
இங்கனைவரும் நலம்.
அங்ஙனமே அங்குமிதை
அறிவதற்கே ஆசை கொண்டேன்.

அன்பினிலே மூழ்கி வந்த
பண்பான கட்டளைக்காய்
சட்டத்தின் சட்டத்திலே
கட்டுப்படா புத்தம்புது
புதுக்கவிதை  புனைகின்றேன்.

சிந்தனையை கோவிலாக்கி
கருவை தெய்வமாக்கி
சொல்லையே பூவாக்கி
பல்வேறு  பூசனைகள்
செய்வதற்கே குருக்களானேன் .
பூவில் பிழையிருந்தால்
மன்னிக்க வேண்டுகிறேன்.
கருவே சரியில்லையெனில்
திருத்திடவே விரும்புகின்றேன்.

கல்வி கற்க கன்னி நான்
கல்லூரிக்கு வந்தபின்
கலைகள் சிலவற்றிலே
கலந்துகொண்டேன் வழக்கம் போல்.
பாரதியார் போட்டியில்
பாடலொன்று பாடினேன்.
முதலாக வந்தேனே
பரிசதனைப் பெற்றேனே....!

ஓவியத்தில் பங்கு கொண்டு
உய்வதனைப் பெற்றேனே!
முதலதனை நழுவவிட்டு
இரண்டாவதாக வந்தேனே!

தனி நடிப்பு என்பதிலே
நரிக்கதையை சொன்னேனே
இரண்டாம் பரிசொன்று கிட்டியது
பறந்து சென்று பெற்றேனே!

படிப்பில் சில குறைஇருப்பினும்
விடிய சில காலம்தான்
முடிவில் நல்ல பலனையே
நாடி நானும் படிக்கிறேன்.

இந்தியாவின் பாஷையான
ஹிந்தியையும் ஓரளவு
பக்குவமாய் எழுதியுள்ளேன்
பொறுத்திருந்தால் பலன் தெரியும்.

குமரச் சகோதரர்கள்
அபிராம சுந்தரியுடன்,
நித்தம் பல புத்தம் புது
தித்திக்கும் கலை
கற்றே புகழ்
எட்டுத் திசை
மட்டும் இன்றி
அண்டம் எங்கும்
பெற்றால் மனம்
மட்டற்றஆ னந்தத்தை
அனுபவிக்கும்.

தகவலில்லை ஊரிலிருந்து
பொறுமையில்லை காத்திருந்து
கோபம் ஒன்றே வடிகாலாய்
பாவை இவள் எண்ணுகையில்
கோவை இதழ் விரித்து
கோதை ஒருத்தியின்
இளங்குயிலின் குரலிலே
இசையதனைக் கேட்டதுபோல்
கண்டேன் தங்கள் கடிதத்தை
வரைந்தேன் காகிதத்தில் எண்ணியதை.

கல்லூரி பத்திரிகையில் - என்
கவிதையொன்று கண்சிமிட்டும்
மின்மினியா? நட்சத்திரமா?
பண்பாய் தாங்கள் படித்துவிட்டு
உண்மைதனை உரைக்கவேண்டும்.

முடிவெடுக்கும் பொறுப்பதனை
சித்திக்கும் கொடுக்கிறேன்
பக்குவமாய் சத்தியத்தை
பாங்காய் உரைக்கக் கோருகின்றேன்.


                                      லக்ஷ்மி ராஜாராம்.

Image result for free image for a girl near the post box

வியாழன், 28 ஏப்ரல், 2016

நிலவிற்கொரு வேண்டுகோள்.- வரதட்சணைக் கொடுமை


நிலவிற்கொரு வேண்டுகோள்.- வரதட்சணைக் கொடுமை


வெண்ணிலவே...!
ஆடவர் எவருமின்றித்
தோழியர் குழாமிடத்
தனித்திருக்கும் உனக்கு
மணாளன் வேண்டுமெனில் - நீ
மண்ணுக்குத்தான் வரவேண்டும்.
எனவேதான்  நான்
உனக்கொரு கதை சொல்லவந்தேன்.
கவிபாட வந்தேனில்லை...

ஆடுகளே மேய்ப்பான்களாகும்
அவலத்தை சொல்லி
அறிவுறுத்த வந்தேன்..

விலை கொடுத்து வாங்கிய
பொருளொன்று
வாங்கியவரை விரட்டும்
விவரத்தை உன்னிடம்
விளக்க வந்தேன்.
வேண்டுகோள் ஒன்று
விடுக்க வந்தேன்!

தாலிகட்ட கூலியாம்
தன்னையே தருபவளுக்கு
கூலி தந்து குழந்தைபெறும்
இதற்குப் பெயர்
குடும்ப விளக்காம்.
சீசீ....
இதுவும் ஒரு
'சிவப்பு விளக்குதான்'

வேடிக்கை என்னவென்றால்
விலை கொடுத்து வாங்கியும்
விடுதலை எமக்கில்லை
விலங்குதான்!
வேதனைதான்!

இங்கு
எந்த வண்டும்
மலரின் மணம் பார்ப்பதில்லை
பணம் பார்க்கிறது...

மனதின் நிறம் பார்ப்பதில்லை
தேனின் ருசி பார்க்கிறது.

அன்பின் சுடர் பார்ப்பதில்லை
அற்பப் பொருள் பார்க்கிறது.

எனவேதான் நிலவே !
உனக்கொரு வேண்டுகோள்!
தட்சணை எதுவுமின்றி
தனதாக்கிக்கொள்ளும்
மணாளன் வந்தால் மட்டும்
மடல் அனுப்பு!
மனமாற வாழ்த்துகிறேன்!
இல்லையேல்
கன்னிகளாகவே இருப்போம்
நாமிருவரும் காலம் முழுதும்.!


Image result for free image of an independent girl


வெற்றுத்தாள் - வரதட்சணைக் கொடுமை.

உன்னை-
எதிர் காலக் காவலனாய்
எங்கிருக்கிறாய் என்றே அறியாமல்....

கவிதையில் பல்லவியாய்        
கற்பனையில் நாயகனாய்
நினைத்திருந்த எனக்கு
பருவம் வந்ததும்
பலவற்றைக் கேட்டு,
பார்த்து, உணர்ந்ததால்
புரிந்தது....

நீ நாயகனுமல்ல,
நல்முத்துமல்ல...
விலைபோக
விலாசம் தேடும்
விளம்பரப்படுத்தப்பட்ட
வேற்றுத்தாளென்று!

நீ
சம்யுக்தையை மணக்கப்போகும்
ப்ருத்விராஜனல்ல !
சம்சாரக் கடலில்
நீ மூழ்கி - நீ முத்தெடுக்க
மூச்சடக்க மட்டும்
மாமனார் முகம் பார்க்கும்
கோழையென்று.!

நீ
வில்லொடித்து சீதையை
மணக்க வந்த ஸ்ரீராமனல்ல !
கல்யாண சந்தையின்
ஏலப்பொருளென்று !

கவிதையாய் நான் காலமெல்லாம்
இருக்க சம்மதிக்கையில்
வேற்றுத்தாளுக்கென்ன .
இத்தனை வீறாப்பு ?

ஒன்றுமட்டும் புரிந்துகொள்
கன்னிகள் போராடத் துவங்கினால்
புவியில் எஞ்சுவது
புல்லினங்கள் மட்டுமே என்று.!

குஜராத் நிலநடுக்கம்.

இயற்கையின் சீற்றத்திற்கு
இரையானது இந்தியா !
இழந்தது தன்  பிள்ளைகளை!

பெருகி வரும் மக்கள் தொகையைப்  
பொறுக்காமல் நடுங்கியதோ!?
அணு குண்டு ஆங்காங்கே வெடிப்பதனால் 
சினம் கொண்டு நொறுங்கியதோ..!?
பொய், புரட்டு, வஞ்சகத்தால் 
வாய் விட்டுக் கதறியதோ...!?
பூமித்தாயே...!
எதனால்...?
எதற்காக இந்த நிலநடுக்கம்...?

மகாத்மா பிறந்த மண்ணில்,
குடியரசு தினத்தன்று 
ஏனிந்த நிலநடுக்கம்...?

புரிந்துவிட்டது.....
பூஜிக்க மறந்துவிட்டோம்....
தாய்நாட்டை 
நேசிக்க மறுத்துவிட்டோம்!

வயல்வெளி அழித்து 
விண்முட்டும் வீடமைத்தோம்...!
மலைகளைப் பெயர்த்து 
மண்ணாக்கினோம்....!
காடுகளை வெட்டிக் 
காசாக்கினோம்..!
கடல் நீரையும்  
களங்கம் செய்தோம்....
சுய நல வேலிக்குள் 
தேச நலனைத் 
தூசியக்கினோம்...!

அதனால்தானோ தாயே!
அலறி வெடித்துவிட்டாய்...?

தவறுகளுக்கு தண்டனை அவசியமே....!
அதற்காக...
அறியாத அப்பாவி அடிபடுவதா...!
வஞ்சகமற்ற பிஞ்சுகள்  பலியாவதா...!

தவறு செய்துவிட்டாய் தாயே...!
அறிவுறுத்த மறந்து 
அடித்து நொறுக்கிவிட்டாய்...

இழந்து தவிப்போர் ஒருபுறமிருக்க,
இருப்பதை.... கிடைப்பதை
சுருட்டுவோரும் அதிகரிப்பர்.
பூசல்களும், வன்முறைகளும்
புற்றீசல் போலப் புறப்பட்டுவிடும்.

என்ன செய்வோம்...?

புதைந்து கிடப்போரை
பொறுக்கி எடுத்து...
இறந்து போனோரை
குவியலாய் எரித்துவிட்டு,
அனாதையாய் ஆனோரை
அன்புடனே அரவணைத்து...
அடிபட்டுத் துடிப்போரின்
வலி தீர மருந்திட்டு....
இன்னும்.... இன்னும்....

உறவினரைத் தொலைத்தோர்,
பசிக் கொடுமையால் தவிப்போர்,
வீடிழந்தோர், மாற்றுடைகூட இல்லாதோர்,
என்ன செய்வோம்....?

பாரதத் தாயே....!
இடிந்து விழுந்த குஜராத்தை
எழுப்பி நிறுத்த...
எத்தனை நாட்கள்
ஆகுமோ இனி....?

இருப்பினும்....
அன்புள்ளம், பண்புள்ளம் கொண்ட
நம் தேசத்துப் பெருமக்கள்
உழைத்துச் சேமித்த
மணித்துளிகள் சிலவற்றை
சேவைக்காய் அனுப்பிவைத்தார்..
அனைவருக்கும் எம் நன்றி!

இன்றுதான்
தைர்யம் பிறந்தது!
தெளிவு தொடர்ந்தது!
ஒன்றுபட்டுச் செயலாற்றி,
எப்பாடு பட்டாகிலும்
எழுப்பி நிறுத்திவிடுவோம் குஜராத்தை!




இயற்கை விவசாயம். பாடல் ; தங்க தாமரை மலரே! படம் : மின்சார கனவு.

உழவர் பெருங்குடி மக்களே! - வாருங்களே!
உண்மை ஒன்றை இன்று, கேளுங்களே!
செய்யும் தொழிலே தெய்வம்!                
சொன்னார் முன்னோர் அன்று!
எந்நாளும் இதனைக் காப்போமே!
                                 (உழவர்)

இயற்கை முறையில் விவசாயம்தான் செய்ய வேண்டும்!
இருக்கும் நல்ல பூச்சிகளைக் காக்கவேண்டும்!
செயற்கை பூச்சி கொல்லிகளைத் தவிர்க்க வேண்டும்!
சிறந்த முறையில் மகசூல் பெற்றே வாழ வேண்டும்!
இலை, தழை, பசுந்தாள் உரம் போட வேண்டும்!
சாண எரு, கம்போஸ்ட் தினம் போட  வேண்டும்!
வளமான மண்ணை நமது சந்ததிக்கு விடவும் வேண்டும்!
                                 (உழவர்)
.

விவசாயம்

உலகத்துத் தொழில்கள் அனைத்தி லுமே...
உழவுத் தொழிலே முதன்மை பெரும் !
உண்ணும் உணவுப் பொருளை யெல்லாம்
உற்பத்தி செய்திது அள்ளித் தரும்!
               
                      நன்மை செய்திடும் பூச்சி பல        
                      நிறையவே இருக்கும் மண் ணுக்குள்!
                     ரசாயன பூச்சிக் கொல்லிகளால்,
                     நசுங்கியே மாளும் சில கணங்களுக்குள்.


இயற்கை முறைவிவ சாயத் தால்
இருக்கும் பூச்சிகள் அழிவ தில்லை!
செயற்கை மருந்தைத்  தவிர்ப் பதனால்
சீரிய விளைச்சல் பெற்றிட லாம்!

                    மனிதர்க்கு இருக்கின்ற கண் போல
                    பயிருக்கு மண் வளம் அவசியமே!
                   இலை, தழை பசுந்தாள் உரம்போட
                   மண் வளம் நன்கு அதிகரிக்கும்!

நிதர்சன உண்மையை உணர்ந் திடுங்கள்!
நல்ல மகசூல் பெற்றிடு ங்கள்..
உடல்நலம் பேண  இதுஒன்றே
உகந்த முறை என செயல்படுங்கள்.

Image result for free image of paddy field

புதன், 27 ஏப்ரல், 2016

வினோத் - கவிதை போட்டிக்காக . ' மனிதனைத் தேடுகின்றேன்.'

வீட்டிலும், வெளியிலும்
காட்டிலும், கடல் பரப்பிலும்
மேட்டிலும்,மேகத்திலும்,
நாட்டிலும், நட்சத்திரத்திலும்,    
நான்
'மனிதனைத் தேடுகின்றேன்.'

புறக் கண்ணுடனே - அறிவுக்
கண்ணுடைய
'மனிதனைத் தேடுகின்றேன்'

அறிவுக் கண்ணுடனும் - நற்
பண்பு கொண்ட
'மனிதனைத் தேடுகின்றேன்'

நற்பண்புடனும் -இனிய
எண்ணம் கொண்ட
'மனிதனைத் தேடுகின்றேன்'

துன்பத்தில் துணை நின்று
துயர் துடைக்கும்
'மனிதனைத் தேடுகின்றேன்'

'தான்' எனும்
தலைகனமற்ற
'மனிதனைத் தேடுகின்றேன்'

தேடி தேடி இறுதியில்
தோற்றதாய் நினைக்கையிலே
தேவையில்லை தேடல் என
தேடினேன் என்னையே....

எத்தனை குறைகள் என்னிடம்.!
எங்கே சென்று
'மனிதனைத்  தேடுவேன்'

ஒவ்வொரு 'மனிதனும்'
தன்னை சீர் செய்தால்..
தேவையில்லையே
'மனிதனைத  தேடுதல்'

Image result for free images of a perfect gentleman


உமா அக்கா பெண் நித்யாவின் சலங்கை பூஜை

என் இனிய நித்யா,
           உன் 
           இமை அசைவில் கண் பேசும் 
            ஈராயிரம் பாவத்தையும்,
            வில்லாகும் புருவங்கள்       
            விளையாடும் நேர்த்தியையும்,
            உதட்டுச் சிரிப்பிலே,
            உலவுகின்ற அழகினையும்,
            கழுத்ததனை நீ வெட்டி 
            கவி பாடும் லாவகத்தையும்,
            கையிரண்டும் மலராக்கி - நீ      
            கதை சொல்லும் வாசத்தையும்,
            இடையழகை இயல் இசை போல்      
            இயம்புகின்ற உடையழகையும்,
            காற் சிலம்பு சப்தமிட்ட 
            காவியங்கள் அத்தனையும் 
            மனக்கண்ணால் நான் கண்டேன் தோழி...
            மனநிறைவு கிட்டவில்லை கேள் நீ!

            நெஞ்சமெல்லாம் 'உன் நடனம்'
            நர்த்தனங்கள் ஆடிவர,
            கண்ணிரண்டும் உன் நடம் காணத் 
            தவித்திருக்கும் இந்நேரம்.......
            'நாட்டியப் பேரொளி' எனும் 
            நற்பெயரை நீ பெற்றிடவே - என் 
            ஆசைகள் அத்தனையும் 
            முத்தங்களாய்  நான் மாற்றி,
            வெண்ணிலவின் புள்ளி ஒன்றில் 
            விண் வழியே அனுப்புகின்றேன்.
            இன்றிரவு விண்ணை நீ 
            அண்ணாந்து பார் !
            அத்தனையும், மொத்தமாய்              
            பெற்றிடலாம்!
                                 லக்ஷ்மி மாமி.

            


        
 
    
          

உமா அக்கா, L.V. அத்திம்பேர்க்கு.

இனிய அக்கா  அத்திம்பேர்,
                           வாசமுள்ள மலர்ச்செண்டு
                                   வசந்தத்தைப்  பரப்புதல் போல்
                           நேசமுள்ள நீவீர் எங்கள்            
                                     நெஞ்சத்துள் நிறைந்துள்ளீர்!


ஒன்றல்ல இரண்டல்ல...
    உபகா  ரங்கள்.
ஓராயிரம் சொல்வேன்
    உதா ரணங்கள்!


                                  உபசாரக் கவிதை என்று
                                         ஒருபோதும் எண்ணாதீர்!
                                  உள்ளத்து உணர்ச்சிகளின்
                                          வெளிப்பாட்டு கவிதையிது!

வார்த்தைகள் நடத்தும்
          அணிவகுப்பல்ல - இது
எண்ணப் பிரவாகத்தின்
           ஊர்வலங்கள்.

                               
                               எந்தன் கவிதைகளால்
                                     என்னை அறிந்திருப்பீர்! - என்
                               நெஞ்சில் இடம் பிடித்த
                                      இனிய ஜோடி நீவீர் என..


எதை வெளிப்படுத்த  எழுதுகின்றேன்?
           என்றே எனக்குப் புரியவில்லை! - எனினும்
எழுத்துக்கள் ஒவ்வொன்றாய்
           பொறுக்கி எடுத்து வந்து


                                பாசத்தில் போட்டெடுத்து
                                        பக்குவமாய் பாட்டெழுதி,
                                படையல்போல் உங்களிடம்
                                         பதமாக சமர்ப்பிக்கிறேன்.
                                                                    லக்ஷ்மி ரவி.

                               


திங்கள், 25 ஏப்ரல், 2016

மானசா (தரங்கிணியின் பெண்) புண்ணியாவசனம். பாடல் : தீராத விளையாட்டு பிள்ளை

அழகான மலர் செண்டு ஒன்று  - இன்று
மெதுவாக மலர்ந்தே பின் மணம் வீசுதிங்கு....!
                                             (அழகான)

தாலாட்டுப் பாடல்கள் பாட - நீயும்
தாலாட்டுப் பாடல்கள் பாட - சேயும்
தலையட்டிக் கேட்டு பின் கண் மூடித் தூங்க..
பட்டம்மா... கண்ணம்மா என்றே....
பட்டம்மா... கண்ணம்மா என்றே.! - இப்பெரியம்மா
தினம் கொஞ்சி முத்தங்கள் கொடுப்பேன்..!
                                             (அழகான)


பள்ளியில் பாடங்கள் படிப்பாள் ....! - இவள்
பள்ளியில் பாடங்கள் படிப்பாள் ....!- பின்னர்
பல்வேறு துறையிலும் காலூன்றி நடப்பாள்...! (பள்ளியில்)
வண்ணங்கள் பல கொண்டு ஒளிரும் - விண்ணில்
வண்ணங்கள் பல கொண்டு ஒளிரும்
வான வில்லாக உலகிலே  வ்யாபித்திருப்பாள்.
                                             (அழகான)



தரங்கிணி ( என் 2வது தங்கை) சீமந்தம் . பாடல் : என்ன தவம் செய்தனை

என்ன தவம் செய்தனை!?  - தரங்கிணி....
மணம் கமழ்  மல்லிகை மடியிலே பூத்திட...!
                                       ( என்ன தவம்)

அம்மாவாய் நீ மாறும் நாள் வருதோ...!? - என்றாலும்
என்தங்கை சிறுபிள்ளை என்றென்றும்.....
                                       (என்ன தவம்)

படைத்தவனே....! வேண்டுகிறோம்....
முத்துக்களில் ஆணி முத்தாய் அளித்திடுவாய்!
                                     (என்ன தவம்)
                                                 

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

சௌமித்ரி (என் முதல் பெண்) கல்யாணம். படம் ; பாரதியார் பாடல் ; மயில் போல பொண்ணு ஒண்ணு

கிளி என்ற.... எங்கள் பொண்ணு...!
குணத்தில் தான் மின்னும் பொன்னு!
மனம் போல .... மாலை கொண்டு
ஜோடி சேர்ந்து - இவள்
கடலின் அலையைப் போலே சிரிக்கிறாள்...-இன்று
மகிழ்ச்சி பெருக்கெடுக்க இருக்கிறாள்....
                                        (கிளி என்ற)

கார்த்திகை மாதம், அகல் ஏற்றும் அந்தி நேரம்
வீதி தோறும் ஒளி வெள்ளம் வீசிய நேரம்..
அழகான பொம்மை... அவனியிலே அவதரித்தாள்.
தனக்கிணை யாரும் இன்றி.... இளவரசி வாழ்ந்து வந்தாள் !
தங்கை தனைப் பெற்றே -  இவள்
ஆனந்தப் பட்டாள்.!
வம்பும், விளையாட்டும் தன் வாடிக்கையாய் கொண்டாள்.
பல வண்ண.... பூக்கள் கொண்ட செண்டைப் போல
அழகு குடும்பம் எங்கள் குடும்பமே...! - இதில்
இவள் மனதை  கவர்ந்த மலர் இணையுதே...!
                                        (கிளி என்ற)


வெள்ளி, 22 ஏப்ரல், 2016

.'உன்னால் முடியும் தம்பி' படத்தின் 'இதழில் கதை எழுதும் நேரமிது ' பாட்டு மெட்டில் எழுதப்பட்டது. அனன்யா (மாதங்கியின் 2வது பெண்) ஆண்டுநிறைவு.

மகிழ்ச்சி மணம்  கமழும் மாலை இது......
இன்பங்கள் இனிக்குது..... ஆ .............!
                                           (மகிழ்ச்சி)

மானே, தேனே, என்று
கொஞ்சும் போது நெஞ்சில்
சந்தோஷ மின்னல்கள் உருவகுதே....!
பிஞ்சு கையால் எனை மெல்ல வருடும் போது
ஓராயிரம் எண்ணம் அலை மோதுதே....
அழகைச் சுமந்து வரும் அழகரசி.....
அழகை சுமந்து வரும் அழகரசி....
பெம்மியை பாரடி....
கண்மணி,  பொன்மணி,புன்னகை நாயகி...
பாடம் படித்து உயர்ந்திடணும் ;
பாட்டும், பரதமும், பயின்றிடணும்;
நல்ல அன்புடன் பழகிடணும் ;
நல்ல பெயரைப் பெற்றிடணும் ;
மேலும் பல சாதனைகள் செய்து
பிறர் போற்றும்படி வாழ்ந்திட வேண்டும்....!
                                   (மகிழ்ச்சி)



.

அபி(என் துரை சித்தப்பா பெண்) நிச்சயதார்த்தம். பாடல் : கனன கனன படம்: லகான்(ஹிந்தி)

மனங்களின்,
மகிழ்ச்சியின் மணம்  இன்று பெருகும்...
இரு மனம் ஒன்றின் மீது ஒன்றாய் இணையும்....
இணைந்து. -  இசைத்து, சிறகினை விரித்து 
பறக்கத் துடிக்குதிந்த குயிலினம் இரண்டு 
விண் வரை உயரே பறக்கும்....
இசை வெள்ளம் எங்கும் பரவும் - நம் 
இதயத்தைக் கொள்ளை கொள்ளும்.....
                                         (மனங்களின்)


நிலவினைக் கண்டதும் உடனே மலர்ந்திடும் 
வெண்ணிற முல்லைப் பூக்கள்....
முல்லையின் வருகையால் மெல்லமாய் சிரித்திடும்
 தண்ணொளி  சந்திர பிம்பம்.....
அதுபோல் இன்று - மலர்ந்தன ரெண்டு 
மனம் போல் என்றும் - மகிழ்வுகள் நன்று......
கனா படி நடக்கும்; நடக்கும்;
எண்ணம் போல் இனிக்கும்; இனிக்கும்;
எந்நாளும் வசந்தம் உங்கள் 
வாழ்வினைத் தேடியே வீசிவரும்......
                                        (மனங்களின்)

வியாழன், 21 ஏப்ரல், 2016

ஸ்ரீராம் (என் நாத்தனார் உமா அக்கா பையன்) கல்யாணம் -'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது ' பாடல். படம் - 'வறுமையின் நிறம் சிகப்பு'

தத்தன தையன,  தத்தன தையன, தனனனன
தான தையன, தானனா ....!
முல்லை மலருது, மெல்ல சிரிக்குது, மணம்  கமழுது 
யாரைக் கண்டதும் நீ சொல்லு.
லலலலல லலலலல லலலலல 
லாலலலல லாலால ...! 
கன்னம் சிவக்குது, புன்னகை பூக்குது, எண்ணம் ஈடேறுது 
ஸ்ரீ ராமைக் கண்டதால் தான் சொல்லு.
தானனா ... தானனா 
ரி ஸ  ரி  னானானா 
முல்லைபூ  ஆர்த்திதான் 
சந்திரன் ஸ்ரீராம் தான்..!
                     (முல்லை மலருது)

னனனனனா ... come on say  it once again....
னனனனனா.... அண்ணலும் நோக்க ..
தானனனதனனானன்.... பூரித்துப் போய்  அவளும் நோக்க okaay...!
தாரே தாரே தாரா ....தென்றல் மெல்ல வீச....
தத்தன தான... படைத்துவிட்டார்!
தானனன தனனனனா.......காதல் கீதம் படித்துவிட்டார்...
தனனனனனா... தனனா... தனனா.. தானனா....
பொங்கும் கடலலைபோல் உற்சாகம் பொங்கட்டும் என்றென்றும் !
                      (முல்லை மலருது)

இப்போ பாக்கலாம்....!
தனன தனன தானா... காப்பியத் தலைவன் தலைவி 
தானனன தானனன்னா..... போல நீங்கள் விளங்கவேண்டும்...
தனனனான தனனனான தானா,,,
சண்டை கிண்டை போட்டுடாமல் என்றும்... (சபாஷ்..!)
சமத்தாய் இருக்க வேண்டும் - உங்கள் அன்பு 
பல்கிப் பெருக வேண்டும்....
கொடுத்த சந்தங்களில் என் மனதை 
வெளிப்படுத்தி பாடிவிட்டேன்...
                    (முல்லை மலருது) 


என் 'புகுந்த வீட்டுப் பெருமையை' பகிர்ந்துகொள்ள இப் பாடல். - எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' பாடல். படம் ' வானத்தை போல.'

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...! லா லா லா...!
எங்கள் மனதில் என்றும் இல்லை தேய்பிறை ! லா லா லா !
கிளி கூட்டம் போலெங்கள் கூட்டமே..!
ஆனந்தக் களியாட்டம்.....
அன்பின் ஆலயம்..
                                   (எங்கள்)

பெற்றோர் பாசம், நேசமெல்லாம்
புக்ககம் வந்தும் பெற்றுவிட்டேன்..!
பிள்ளைபோல பார்க்கும் இந்த
பெரியோர் கால்தொட்டுப் போற்றுகிறேன்..!
மூவர் இங்கே, அறுவர் ஆனோம்....
அன்பெனும் கயிற்றினில் கட்டுண்டோம்....!
பறக்கையிலே சிரமம் என்றால
சிறகினைத் தரவும் தயங்க மாட்டோம்....!
பூந்தோட்டத்து பட்டுப் பூச்சியாய்
பாடித் திரிகின்றோம்...!
கூடிக் களிக்கின்றோம்.!
                                       (எங்கள்)

எங்கள் சொந்தம் பார்த்தாலே..!
சொர்க்கம் சொக்கிப் போகுமே...!
எங்கள் நட்பைப் பார்த்தாலே...!
நாடே சுற்றிப் போடுமே...!
அண்ணனுடன் பிறக்கவில்லை - ஆனால்
எனக்கு அண்ணனுண்டு...
அக்காக்கள் எனக்கு இல்லை
அந்தக் குறையும் இருக்கவில்லை !
ஏ,....... ஆண்டவா இது நீடிக்க
வேண்டிக்கொள்கின்றேன்....
பிரார்தித்துக்கொள்கின்றேன்...!
                                       (எங்கள்)
                          

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

மாமனார்(Dr.S.சந்திரசேகரன்) சதாபிஷேகம். பாடல் : ஆயிரம் திருநாள்...படம்: புது வசந்தம்.

ஆயிரம் திருநாள்....!
பூமியில் வரலாம்... வரலாம்...!
இதுபோல் வருமா....!?
ஆயிரம் மலர்கள்.....
பூமியில் உளதாம்.... உளதாம்....!
குறிஞ்சி போல் வருமா...!?
வானில் நீந்தும் மேகங்களே.....!
வாழ்த்துக் கூறுங்களேன்.....!
நேரில் வந்து தெய்வங்களே....!
பூவைத் தூவுங்களேன்....!
                              (ஆயிரம் திருநாள்)

இயற்க்கை படிக்கும் கவிதைகளெல்லாம் ....
இதயம் இனிக்கச் செய்திடுதே...!
சிரிக்கும் விண்மீன் கூட்டங்களெல்லாம்
சேர்ந்து வாழ்த்து படிக்கிறதே...!
வாசத்தை வீசும் மலர்ச் செண்டும்...
நேசத்தைப் பாசத்தைப் பொழிகிறதே...!
அசைகின்ற பூங்காற்றும்,
ஒளிர்கின்ற வெண்ணிலவும்,
வாழ்த்தைத் தூவி மகிழ்கிறதே...!
                             (ஆயிரம் திருநாள்)

இறைவன் படைத்த உயிரினம் யாவும்...
இணைந்தே வாழ்த்து படிக்கிறதே...!
வாழ்க, வளர்க, ஆயிரம் ஆண்டு..
வாழ்த்துக்கள் பலநெஞ்சம் சொல்கிறதே...!
வாழ்வே எந்நாளும் வளர் பிறையே....
பாசம் நம் வாழ்வின் பதவுரையே..!
உலகினர் எல்லோரும்
உறவெனக் கொண்டோமே...!
அன்பெனும் ராஜாங்கம்
அமைத்திடச் செய்தோமே...!
இனிமை.., வசந்தம் தொடரட்டுமே.....!
                                 (ஆயிரம் திருநாள்)






திங்கள், 18 ஏப்ரல், 2016

ஸ்ரீவித்யா(என் கிருஷ்ணமூர்த்தி மாமா பெண் ) கல்யாணம் - "மாமன் பொண்ணுக்கு...பாடல். படம் : சின்ன தம்பி பெரிய தம்பி

நிகழும் சர்வதாரி ஆண்டு ; சித்திரைத் திங்கள் 4 ம் நாள்
திருவாளர் செல்வர் ஸ்ரீனிவாசனுக்கும் ; திருவாளர் செல்வி ஸ்ரீவித்யாவுக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறோம்....
தங்கள் நல்வரவை விரும்பும்
கிருஷ்ணமூர்த்தி, ஜெயஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி
மற்றும் குடும்பத்தார்..
********     ********     *******     ******      *******
மாமன் பொண்ணுக்கு.... ஹே!  ஹே!
கல்யாணம் வந்தாச்சு....
மாலை மேளம் கொண்டாட்டம்தான்.
கல்யாண ய பந்தலிலே..
முன்னே ரெண்டு வாழை கட்டி..
பொன்னாலே சீர்வரிசை
வெள்ளித்தட்டில் கொண்டுவந்து
பொண்ணுக்குப்  படிக்கவந்தோம்
நலங்கு பாட்டு.....!
                                 (மாமன் பொண்ணுக்கு)

வானத்து வெண்ணிலவ
வாழ்த்துப்பா  பாடச் சொல்வோம்.
கார் முகில் கூட்டி வந்து
மேளங்கள் கொட்டச் சொல்வோம்!
விண்மினிகள் ஒளி வெள்ளம்  வீசவே...!
நட்சத்திரம் அட்சதைகள் தூவவே...!
ஆடும் மயில் நாட்டியங்கள் ஆடவே...
அத்தனை பேர் நெஞ்சமும் கூத்தாடவே...
தட்டடுங்க கைகள !
போடுங்க தாளத்த ..!
                                 (மாமன் பொண்ணுக்கு)

இவள் கால் வைத்து நடக்கையில்
கைகொட்டி கொண்டாடினோம்...!
வார்த்தைகள் பேசப் பேச...
வாயெல்லாம் பல்லாய் போனோம்!
பள்ளியிலே பரிசுகள் வாங்கினாள்!
பட்டம் பெற கல்லூரிக்குப் போய்வந்தாள் !
'கட்டித்தங்கம்' என்று கொஞ்சி போற்றினோம்!
கட்டி வைத்து ஸ்ரீநிஇடம் சேர்க்கிறோம் !
மின்னிடும் ஆனந்தம் !
பொங்கட்டும் என்றென்றும் !
                                  (மாமன் பொண்ணுக்கு)



மாதங்கி (என் தங்கை) நிச்சயதார்த்தம் - பாடல்: 'நேற்று இல்லாத மாற்றம' 'படம்:'புதிய முகம்'

நாணம் கன்னத்தில் வந்து  விட்டதோ...!
வானவில் உந்தன் வாழ்வில் வந்ததோ...!
இதயம் சேர்ந்துவிட்டதோ...?!
ஜதிகள் கூடிவிட்டதோ ...?!
ஸ்வரங்கள் தோன்றிவிட்டதோ...?!
சொல் பெண்ணே....!
                                    (நாணம் கன்னத்தில்)


எண்ண நீரோடையில்... - ஒரு
சின்ன பூ பூத்ததோ...!
வண்ண பூ போலவே....
வாழ்க்கை உண்டாகுதோ...?!
மன்னன் முகம் பார்த்து பேச....
காதல் உண்டாகுதோ.....?!
மண்ணைத் துளைத்திடவும் ஆசை உண்டாகுதோ....
விண்ணைத் தொட்டிடவும் ... வேகம் உண்டாகுதோ...?!
உன்னவன் கைகோர்த்து நீயும்
உலகத்தை வென்றிடுவாய்..!
                                      (நாணம் கன்ன்னத்தில்)

சிற்பி இல்லாமலே... - ரெண்டு
சிலைகள் உருவாகுது...
வார்த்தை இல்லாமலே....
உள்ளம் இடம் மாறுது....
சிறகு இல்லை என்றாலும்
பறக்கத் துடிக்கின்றது...
காதல் சிட்டுக்களே....!
இப் பாட்டு கூத்துக்களும்....
பாசம் பந்தங்களும்....
சிரிப்பும் சந்தோஷமும்,
உங்களது வாழ்வில் என்றும் நிலைத்திருக்கும்...
                                    (நாணம் கன்னத்தில்)


 



சனி, 16 ஏப்ரல், 2016

சந்தியா (தங்கை மாதங்கியின் பெண்) ஆண்டுநிறைவு - "மகாநதி' - படம் "ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்' பாடல்

என் அன்பு தங்க கண்ணனை இன்று
என்னிடம் காட்டடி...!
பொன் வண்ண தங்க கண்ணனை நீயும்
பூ போல போற்றடி.!
நல்ல அன்னையாய், நல்ல தோழியாய்
செல்லமாக நீ பேணடி !
என்னை பற்றியும் எடுத்துக் கூறடி
பெரிய அம்மா என சொல்லடி !
                                   (என் அன்பு தங்க)

கொஞ்சியே அணைத்து....
அன்பினை  பொழிவேன்...
உச்சி தனை முகர்ந்து
மெச்சியே மகிழ்வேன்....
மாங்கனி போல் இந்த கன்னங்கள் இரண்டிலும்,
தித்திக்கும் முத்தங்கள்... மொத்தமாய் தருவேன்....
அந்நாளில் நானும் நீயுமே,
ஆடி பாடியது ஆயிரம்..
அம்மாடி என்ன சொல்லுவேன் அத்தனையும் பூமணம்..
தேனாக நெஞ்சை அள்ளுமே அந்த எண்ணங்கள் ஆயிரம்....
                                      (என் அன்பு தங்க)

பாடங்கள் படித்து... பட்டங்கள் பெறுவாள்....
பாட்டுக்கள் பாடி.... பட்சி போல் இருப்பாள்....
பாரெங்கும் பறந்து.... பூவாக சிரிப்பாள் ...
பாராட்டுக்கள் பெற்று பூரிப்பாய் இருப்பாள்..!
அம்மாடி எந்தன் கண்மணி.... சின்ன பைங்கிளி பூங்கொடி...!
கட்டான கட்டி தங்கம்டி ! பட்டு தாமரை பூவடி...!
பொன்னாலே பிரும்மன் பண்ணினான் இந்த
மெய்யான சிலையடி....!
                                     (என் அன்பு தங்க)


புதன், 13 ஏப்ரல், 2016

கல்யாண பாடல் - 'சிம்லா ஸ்பெஷல்' படம் 'நண்பனே! எனது உயிர் நண்பனே!' பாடல்

திருமணம்...... இனியதொரு திருமணம்....
நீண்டநாள் உறவிது
இன்றுபோல் என்றுமே தொடர்வது......!
                                 (திருமணம்)

ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும்....
இரு கிளிகள் நீங்கள் என்றும்....
உறவாடுங்கள்...... இனிதாகவே....!
ஒரு விழியில் காயம் என்றால்...
மறு விழியும் கண்ணீர் சிந்தும்....
பாசத்தைதான் ...  பரிமாறுங்கள்....
இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஓசை.....
இன்றும், என்றும் கேட்க வேண்டும்
எமது ஆசை....
                                (திருமணம்)




ஸ்ரீராம் (உமா அக்கா பையன்) நிச்சயதார்த்தம் - 'சிந்து பைரவி' படம்' பாடல். கலைவாணியே'

மகிழ்வானதே.....! இம் மாலைப் பொழுது ...
இள  நெஞ்சின் கனவு ...
நனவாகும்! நந்நேரம் ....
சிரிப்பும், களிப்பும், நிறைவும், மகிழ்வும்.....
நிலைத்திட அருள் புரி கலைவாணியே.!.

மணக்கும் பூ விலங்கு...
உன் கையில் விழுந்து....
arrest warrent கொடுத்து..
வலக்கையால் பிடித்து....
சிறை அறைதன்னில் உனைத் தள்ளி
சிரம் அசைத்திடப்   பழக்கும்.!
ஆயுள் கைதியாக உனை ஆக்கி,
ஆணை இட்டே அது ஜெயிக்கும்.
என் அன்பு மருமான்........
அறிவான மருமான்.....
 நீயே வந்து ...வேண்டும் என்று..
பொன் வலையில் விழுந்துவிட்டாய்
என்செய்வோம்.....?
                                      (மகிழவானதே)

உண்மை ஒன்றை உரத்து சொல்லுவேன்
உனது தலைவி இனி ஆர்த்தி...!
liscence கிடைத்ததும் மிரட்டிப் பார்த்திடும்
உலகின் நியதி மிக நேர்த்தி...!
ஜால்ரா போடணும், கூஜா தூக்கணும்
உனக்கு பழக்கம் அதில் தேர்ச்சி...!
குக்கர் வைக்கணும், புடவையும் தோய்க்கணும் ,
உனக்கு கிடைக்கும் நல்ல பயிற்சி..!
கண்ணா என் செய்வாய்...?
கண்ணா இனி மேல் யோசித்துப் பயனில்லை
கேட்டாய்,  நிச்சயம் செய்துவிட்டோம்...
ஸ்ரீராம்... கண்ணே  ஸ்ரீராம்.....
இனி தப்ப வழியில்லை
கார் மாறி ஒக்காராதே!
உதை படுவாய் !
                                   (மகிழ்வானதே)



புதன், 6 ஏப்ரல், 2016

சம்மந்தி பாடல் - ஸ்ரீராம் கல்யாணம் - 'செந்தாழம் பூவில் ' படம் - முள்ளும் மலரும்.

கல்யாண வீட்டில்,  சம்மந்தி சண்டை
இல்லாட்டா ருசித்திடுமா.....!?  (2)
மாப்பிள்ளை பந்தா வேண்டாமா...?
பெண் வீட்டை சாட மட்டோமா..?
இப்போதே...... ஆரம்பம்....!
அதில்தானே....பேரின்பம்...!

பன்னீர் சொம்பில் பன்னீர் தவிர
அன்பும் சேர்த்தீர் சரிதானா...?
சிரித்த முகமாய் வளைய வந்து
சிறப்பு செய்தீர் முறைதானா ...?
பூவை வைத்தால் போதும் என்றால்
பொன் வைத்தல் அவசியமா...?
ஆசையுடன்.. பாசம் சேர்த்து
பாங்காய்  செய்தல் நியாயமா...?
குற்றம்!,  குற்றம்! எல்லாம் குற்றம்!
                                   (கல்யாண வீட்டில்)


அசத்தல் மிகுந்த மெனுவைப் போட்டு
அமுது படைத்தீர் தேவையா...?
ரசனை மிளிர கல்யாணத்தை
நடத்துதல்தான் நேர்மையா....?
என்ன ஒரு ஆடம்பரம்.....!
கேள்வி கேட்டிட ஆளில்லையா...?
விண்ணுலகும், மண்ணுலகும்,
வியந்ததையும் பார்க்கலியா ...?
மறவோம், மறவோம்
ஸ்ரீராம் திருமணம்....!
                             (கல்யாண வீட்டில்)



செவ்வாய், 5 ஏப்ரல், 2016

கல்யாண பாடல்கள் - கல்யாண மாலை' பாட்டு.. படம் ; புது புது அர்த்தங்கள்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே !
என் பாட்டைக் கேள்  நீ
உண்மைகள் சொல்வேன்!
ஸ்ருதியோடு  லயம் போலவே...
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!
                                                           (கல்யாண)

மாலை இடும் சொந்தம் முடி போட்ட பந்தம்
அன்பென்னும் சிறையில் கைதாகுமே...!
சோலைக் குயில் ரெண்டும் இஷ்டப்படி எங்கும்
இசை பாடித் திரியும் பொற்காலமே...!
அழகான மனைவி, அன்பான துணைவி..
அமைந்தாலே பேரின்பமே...!
மடி மீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே...!
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி..
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி...
சந்தோஷ  சாம்ராஜ்யமே.....!
                                                         (கல்யாண)


எங்கெங்கோ பிறந்து எங்கெங்கோ வளர்ந்து
இந்நாளில் ஒன்றாய் இணைந்தாய் அம்மா...!
கண் இரண்டு என்று இருந்தாலும் காட்சி
ஒன்றாக வேண்டும் கேள் நீ அம்மா...!
விட்டுக் கொடுத்தல்,  தட்டிக் கொடுத்தல்
இருந்தாலே பேரின்பமே...!
நல்ல துணையாக இருந்திடல் வேண்டும்
முல்லை பூ போலே சிரித்திடல் வேண்டும் !
உல்லாசம் நீடிக்குமே...!
                                                          (கல்யாண)
'

தரங்கிணி (என் 2வது தங்கை) கல்யாணம் - "மின்சார கனவு' - படம். 'தங்கத்தாமரை மலரே' பாடல்

 முத்துக்குமரா..! உனக்கு. - ஓர் கவிதை..!.
காதைக் கொடுத்து கேள் நீ - என் பாட்டை.
உள்ளம் உந்தன் உள்ளம் - என் நாளும்
இவளின் சொந்தம்.
இவை எல்லாம் இந்தப் பெண்ணாலே...!
                                                   (முத்துக்குமரா)

பருப்பு சாம்பார் கறியும் கூட்டும் பண்ணவேண்டும்...
மறுப்பு ஏதும் சொல்லிடாமல் ஊட்டவேண்டும்...!
கருத்த கூந்தல்  எண்ணெய்  தேய்த்துவிடவும் வேண்டும்! - இவள்
விரும்பும்போது காலைப் பிடித்து விடவும் வேண்டும்...
கோ ழி கூவும் முன்னே எழுந்திருக்க வேண்டும்...!
கோலம் போட்ட பின்னே பால் காய்ச்ச வேண்டும்!
Bed coffee கலந்து வந்து Good Morning சொல்ல வேண்டும்....
                                                      (முத்துக்குமரா)

கழுத்து நிறைய நகைகளை நாளும் பூட்ட வேண்டும்
அழகு கண்ணே என்றே சொல்லி போற்ற வேண்டும்.
புகழ்ந்து பேசி பூவை தலையில் சூட்ட வேண்டும் - இவள்
அழைக்கும் முன்னே கையை கட்டி நிற்க வேண்டும்....!
மழை பெய்யும் நாளில் குடையாக வேண்டும்...
குளிரெடுக்கும் போது போர்வையாக வேண்டும்....!
மொத்தத்தில் நல்ல கணவன் என்ற பெயரை எடுக்க வேண்டும்.
                                                     (முத்துக்குமரா)




திங்கள், 4 ஏப்ரல், 2016

தரங்கிணி நிச்சயதார்த்தம் - 'புல்வெளி, புல்வெளி தன்னில்' - பாட்டு. "ஆசை" பட பாடல்.

தரங்கிணி, தரங்கிணி -  இன்று
அன்புடன், செல்லமாய் நாங்கள் 
பாடிடும் பாட்டிதைக் கேளம்மா...
முத்து சூரியன் சூரியன் ஒன்று 
மெல்லமாய், மெல்லமாய் வர 
மலர்ந்திடும் தாமரை நீயம்மா.....
இதயம்.... இடம் மாறுதோ கூறம்மா .....!
இதழின் புன்னகை இதைக் கூறுதம்மா ...! -இன்று 
பறக்க தோணுதா...? - நீரில் 
மிதக்க தோணுதா...?
                                 (தரங்கிணி...)

ஜில், ஜில், ஜில், ஜில்,ஜில்,ஜில், உந்தன் நெஞ்சில்...
வண்ணமிகுந்த வானவில்லைத் தந்தது யாரு...?
தில், தில், தில், தில், தில், தில், உந்தன் மனதில்...
சந்தோஷப் பூ மழையைப் பெய்தது யாரு... ?
விழிகளில் தெரிகின்ற இவர் உருவம்....
இதயத்தின் .அடி வரை ஊடுருவும் !
செவிகளில் விழுகின்ற இவர் குரலோ ...
தித்தித்திடும் தேனாய் மாறிவிடும்...!
உந்தன் மனம் - அதன் நிறம்..!
உந்தன் கனா - அதன் குணம்...!
அம்மம்மா.............!
தோழன் கிடைத்துவிட்டான் பாரடி...! - நீயும் 
தோகை விரித்து இன்று ஆடடி...!
                                                     (தரங்கிணி )

முத்து,முத்து முத்து, முத்து  என - உந்தன் உள்ளம் 
முத்துக்குமார் பெயரைத் தான் தினமும் சொல்லும் !
கிணி, கிணி , கிணி , கிணி  என அவரின் உள்ளம் 
தரங்கிணி பெயரைத்தான்  நித்தம் சொல்லும்..!
இனிதான மண வாழ்க்கை ஒப்பந்தம்....
இறைவனின் அருள் என்றும் உமக்கிருக்கும்...!
துணை என பெரியோர்கள் உடனிருக்க....
தவழட்டும் தவழட்டும் வசந்தம் என்றும்....!
சோலை தென்றல்....- அதன் சுகம்...!
தாழம்பூவும் ..... அதன் மணம் ...!
அம்மம்மா.........
வாழ்வில் கிடைத்திருக்க வேண்டுகிறோம் - உங்கள் 
வாழ்க்கை வளம் கொழிக்க வாழ்த்துகிறோம்....!
                                                                  (தரங்கிணி)

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

ரேவதி (என் வசந்தா அத்தை பெண்) கல்யாணம்'அலைபாயுதே' - படம். பாடல்; சிநேகிதனே! சிநேகிதனே!

 மணமக்களே, மணமக்களே, மகிழ்வான மணமக்களே....
இரு மனங்கள் ஒன்றாகும் திருமணம்  நன்னாளே...
இதே மகிழ்ச்சி .. மகிழ்ச்சி....
இதே மலர்ச்சி... மலர்ச்சி....
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்...
                                                             (மணமக்களே)

हे सूरज जैसे महेश के साथ , कमल जैसी  रेवती की
शादी हो रही है - यह मंडप में
शादी हो रही है!                                  
 हे... धूमधाम  के साथ आवाज़ सुनाई पड़ती है। ..
ख़ुशी की आवाज़ है - जहाँ देखो
खुशी की आवाज़ है!
दूल्हा, दुल्हिन दोनों आज तो
सुन्दर लगते हैं - माला  पहनके
सुन्दर लगते हैं!
                                                              (மணமக்களே)



சௌரபி(என் 2வது மகள் )ஆண்டுநிறைவு வரவேற்பு பாடல் - பாடியவர் சௌமித்ரி

SWAGATHAM! SWAGATHAM!SWAGATHAMPLEASE COME!
आईये!
RANDI!
வாங்க!
COME ONE AND ALL TO N.S.MAHAL...!
COME ONE AND ALL TO N.S.MAHAL.....!
TOMORROW IS MY SISTER'S BIRTHDAY
TOMORROW IS MY SISTER'S BIRTHDAY...
WE ARE GIVING YOU MANY VARIETY PROGRAMMES......
WE ARE GIVING YOU MANY VARIETY PROGRAMMES.
COME SEE THE PROGRAMMES!
SUCH A NICE PROGRAMMES! (2)
WELCOME WELCOME PARTICIPANTS,
WELCOME WELCOME VIEWERS,
WELCOME WELCOME RELATIVES,
WELCOME WELCOME FRIENDS!
                                         (COME ONE AND)


சனி, 2 ஏப்ரல், 2016

'ஷ்யாம் நிவாஸ்' (உமா அக்கா வீடு) க்ரஹப்ரவேசம்

வருக வருக என அழைக்கின்றோம் - நம்
வாழ்வு மலர்ந்திட துதிக்கின்றோம்.....
வீடு கட்டி நல்ல க்ரஹப்ரவேசம் -இங்கு
வரவேண்டும் வாழ்த்து தரவேண்டும்.
                                                     (வருக)


வீட்டைக் கட்டிய வெற்றி களிப்புடன்
வீற்றிருக்கும் இரு ஜோடி கிளிகளை
வாழ்த்த வந்திருக்கும் பெரியோர்களே.....
வாருங்கள், வாருங்கள், வழ்த்ததை தூவுங்கள்.!
                                                       (வருக)

விண்ணை வளைத்து, இங்கே
மண்ணை துளைத்து.....
விருந்து நடக்குது வாரீர்! வாரீர்!
வருக என்று நாங்கள் அழைக்கின்றோம்
வாருங்கள், வாருங்கள்
வழ்த்ததை தூவுங்கள்...!
                                                           (வருக)



வெள்ளி, 1 ஏப்ரல், 2016

சௌமித்ரி (என் முதல் பெண்) ஆண்டுநிறைவு பாடல் -பொன்னில் வானம் போட்டது கோலங்களே !' படம் - 'வில்லுபாட்டுக்கரன்'

கண்ணே, பொன்னே, மல்லிகை பூச்சரமே .....! - நீ
பிரம்மன் தூரிகை காட்டிய  ஓவியமே..!
கண்மணியே, பொன்சிலையே,  கற்கண்டு  தேன் சுவையே....
                                                                                             (கண்ணே)

ஓடியே உனை அணைத்து முத்தம் கன்னங்களில் கொடுத்தேன்...!
தேடிய சுகம் இதுதான்.. இது தெய்வம் தந்த விருந்து....
பூப்போல் உன் உள்ளம்தான்... காண்கையில் மனம் துள்ளும்தான் ...
ஆனந்தம் ஆனந்தம்தான்........
                                                                                               (கண்ணே )


தாம் தகிட தீம் என்று நடனம் ஆட வேண்டும்......
தா .. தநிசபா ... ... என்று பா ட்டு பா ட வேண்டும்....
பார் முழுதும் பறந்து திரிந்து களித்திருக்க வேண்டும்...
நீ பல கலைகளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
பாடம் கற்று, பட்டம் பெற்று, பரிசு பெற வேண்டும்....
பூ முடித்து  புவிதனிலே பவனி வர வேண்டும்....
பூ போல்  தினம் சிரித்து ...... அன்பாய்  எல்லோரையும் நடத்து....
கனிபோல் இனித்திருந்து..... உன்பால் எல்லோரையும் திருப்பு....
பூப் போல் உன் உள்ளம்தான்...... காண்கையில்  மனம் துள்ளும் தான்....
ஆனந்தம் ஆனந்தம் தான்....
                                                                                                    (கண்ணே)


'

ஊஞ்சல் பாட்டு. - படம் - 'சிப்பிக்குள் முத்து' பாடல் - 'வரம் தந்த சாமிக்கு'.

வானத்து நிலவதுக்கு உளமாற லாலி!
மலர்ந்துள்ள மல்லிகைக்கும் மனமாற லாலி! 
பொன்னூஞ்சலில் அமர்ந்த மல்லி நிலாவே...
ஜெகம் போற்ற வாழ்ந்திடவே  நாங்கள் பாடும் லாலி.....
(வானத்து)

கல்யாண ராமனுக்கு வைதேகி போலே.
அரிச்சந்தர ராஜாவுக்கு சந்திரமதி போலே..
சத்தியவானுக்கு சாவித்ரியை போலே.. 
(திருவள்ளுவருக்கு வாசுகியும் நீயே!)                                  

ஜெயராமனுக்கு என்றும் மாதங்கியும் நீயே!     
(வானத்து)



அழகான தமயந்திக்கு நளராஜன் போலே..
அன்பான சம்யுக்தைக்கு ப்ருத்விராஜன் போலே......
எங்கள் மாதங்கிக்கு ஜெயராமன் நீயே...
அன்பான கணவனும் நல்ல நண்பன் நீயே..

(வானத்து )



மாதங்கி கல்யாணம் - M.S.சுப்பலக்ஷமி பாடிய பாரதியார் பாடலான ' நெஞ்சுக்கு நீதியும் பாடல்

நெஞ்சுக்கு நெஞ்சென மாற்றம் நிகழ்த்திடும் ஜோடி புறாக்க்களிங்கே...!
ஊஞ்சலில் ஆடியே உலகை மறந்திடும்  உன்னத காட்சி இங்கே .......!
கொஞ்சி மகிழ்ந்திட குலவிக் களித்திட காலமும்  வந்ததிங்கே.....! (கொஞ்சி மகிழ்ந்திட)
வாஞ்சையுடன் இருப்பார் அவர் பேர் ஜெயராம்.. ஜெயராம்....ஜெயராம்....
வாஞ்சையுடன் இருப்பார் அவர் பேர்  ஜெயராம்!

பண்ணிசைத்து நல்ல பாட்டிசைத்து பாவை பாசத்துடன் இருப்பாள் .....!
அன்பு ஒன்றே வாழ்க்கை மூலம் என்றே இவள் அறிந்துணர்ந்தே  நடப்பாள் ..!
கண்ணினைப்போல்  உன்னை காத்திடுவாள் என்றும் பொன்னைப்  போல் போற்றிடுவாள்  (கண்ணினைப்போல்)
பெண்ணின் பெயர் இதுதான் அறிவீர் மாதங்கி... மாதங்கி...மாதங்கி....
பெண்ணின் பெயர் இதுதான் அறிவீர் மாதங்கி...

வெள்ளை மலர் மீது வண்டு அமர்ந்திங்கு தேன் என்றும் உண்ண வேண்டும்.
கள்ளம் கபடமற்ற காதலினால் என்றும் கட்டுண்டிருக்க வேண்டும்!
நல்ல பொருத்தம் இது என்றே இந்த நாடே புகழவேண்டும்..
நல்ல பொருத்தம் இது என்றே இந்த பாரே புகழவேண்டும்..
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே, வாழ்கவே,வாழ்கவே..வாழ்கவே..!
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே, வாழ்கவே,வாழ்கவே.....!