வியாழன், 31 மே, 2018

இசையுலக சாதனையாளர் D.K.பட்டம்மாள்

26.05.2018,
தியாப பிரும்ம சபை,
தஞ்சாவூர்.

              D.K.பட்டம்மாள் அவர்களின் நூற்றாண்டு விழா, ஸ்ரீ.பெசண்ட்                                                                   அரங்கம், தஞ்சாவூர்.
    
                               இசையுலக சாதனையாளர் D.K.பட்டம்மாள்
                                             சிறப்புரை : திருமதி லக்ஷ்மி ரவி.

இசையுலக சாதனையாளர் D.K.பட்டம்மாள் அவர்கள்
       இந்த அரங்கத்தில் குழுமியுள்ள ஆன்றோர்கள்  அத்தனை பேருக்கும் லக்ஷ்மி ரவியின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
       தனது பவள விழாவினைக் கொண்டாடிவரும் இத் தியாகப் பிரம்ம சபை, இசைத் துறைக்கு ஆற்றிவரும் தொண்டு அளவிடற்கரியது. இதன் அங்கத்தினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு, ‘சாதனைப் பெண்மணி D.K.பட்டம்மாள்’ என்ற தலைப்பில் எனக்குத் தெரிந்த சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
      ‘இசை’ என்ற சொல்லுக்கு இசைய வைத்தல் என்பது பொருள். மனிதர்களை மட்டுமின்றி அனைத்து உயிரினங்களையும், கட்டுப்படுத்துகின்ற – பணிய வைக்கின்ற இசைய வைக்கின்ற ஒரு மகத்தான சக்தி இசைக்கு உண்டு.  ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டமைக்கப்பட்ட அழகான ஒரு ஒலி வடிவம்தான் ‘இசை’ எனப்படுகிறது. இந்த இசை, செவிக்கு இனிமை சேர்ப்பது மட்டுமின்றி, பல நோய்களை குணப்படுத்தும் அபார சக்தியையும் கொண்டுள்ளது.  சில ராகங்களைக் கேட்பதன் மூலம், மனம் அமைதியடைந்து, மனஅழுத்தம், விரக்தி மற்றும் பல இதய நோய்கள், குணமாகின்றன என்று மருத்துவம் நிரூபித்துள்ளது.
         இந்த இசைத்துறை பொதுவாக பல பிரிவுகளைக் கொண்டது. அதில் கர்னாடக இசை என்பது மிகவும் பழமையானது. இருபதாம் நூற்றாண்டுகளில், இந்த கர்னாடக இசையில் ஆண்களே கோலோச்சிக் கொண்டிருந்த மேடைகளில், தங்கள் இசைத் திறமையால், ‘பெண் மும்மூர்த்திகள்’ என்று பாராட்டப்பட்டவர்கள், M.S,சுப்புலட்சுமி, M.L.வசந்தகுமாரி மற்றும் D.K.பட்டம்மாள் ஆகியோர். இவர்களுள், 1919ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் நாள் பிறந்த D.K.பட்டம்மாள் அவர்களின் நூற்றாண்டினைக் கொண்டாடும் பொருட்டு, அவர் சங்கீதத் துறையில் ஆற்றிய சாதனைகளையும், சந்தித்த சவால்களையும், பெற்ற விருதுகளையும், ஆற்றிய சமுதாயத் தொண்டினையும் பற்றி பேச  விழைகிறேன்.
          D.K.பட்டம்மாள் அவர்கள் தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்திற்கு அருகில் தாமல் (DHAAMAL) என்ற ஊரில் தாமல்.கிருஷ்ணசாமி தீக்ஷதருக்கும், காந்திமதி (எ) ராஜம்மாள் என்பவருக்கும் பிறந்தவர். இவரின் இயற் பெயர் அலமேலு. இவர் சிறு வயதிலிருந்தே இசைத் துறையில் பிறவி மேதையாக இருந்ததால் அனைவராலும் ‘பட்டா’ என்று செல்லமாக அழைக்கப்பட்டு, பின் அப்பெயரிலேயே பேரும், புகழும், பெற்றுள்ளார் எனத் தெரிகிறது. இவர் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.  இவருடைய அப்பாவுக்கு இசையில் ஆர்வம் இருந்திருக்கிறது.  அம்மா இனிமையாகப் பாடக்கூடியவர். ஆனால் அக்காலத்தில் பெண்கள் பொது இடங்களில் பாடுவது என்பது கலாச்சார சீரழிவாகக் கருதப்பட்டிருந்தது. இவருடைய அம்மா ஒரு கல்யாண வீட்டில் பலர் கேட்டுக்கொண்டதற்க்கிணங்க, ஒரு பாட்டு பாடிக்கொண்டிருந்தாராம். அப்போது, DKP யின் தாத்தா, உடனே அப்பாட்டை நிறுத்தும்படி சினந்து கூறியிருக்கிறார். அப்படியிருந்த ஒரு சூழ்நிலையில் D.K.பட்டம்மாள் அவர்கள் இசைத் துறையில் நுழைந்து. சாதனை படைத்தது ஒரு ஆச்சர்யமான விஷயம்தான். பின்னாட்களில் தன் தாத்தா தற்போது உயிரோடு இருந்து தான் மேடைகளில் பாடி, பிரபலமாக இருப்பதை பார்த்திருக்க வேண்டும் என்று அவரே கூறியிருக்கிறார்.
       
           இவர், சிறுவயதில் முறைப்படி குருகுலத்தில் சங்கீதம் 
கற்றுக்கொண்டவரல்ல. ஆனால், ஏதாவது இசைக் கச்சேரிக்குப் போய் 
வந்தால், தாம் காதால் கேட்ட கிருதிகளையும், ராகங்களையும் இயல்பாகப் பாடுவாராம். அவரது குரலின் இனிமையால் மகிழ்ந்த இவருடைய தந்தை இவருக்கு சில பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார். பிறகு ஒரு தெலுங்கு சங்கீத ஆசிரியரிடம் முறைப்படி சங்கீதம் பயிலச் செய்து இருக்கிறார்.
      D.K.P அவர்கள், முதன் முதலில், தனது 8 வது வயதில் ‘பைரவி’ 
ராகத்தில் அமைந்த தியாகராஜ கீர்த்தனை ஒன்றை ஒரு போட்டியில் 
பாடி, முதல் பரிசைப் பெற்றிருக்கிறார்.
      தனது 10 வது வயதில் மெட்ராஸ் கார்ப்பொரேஷன் ரேடியோவில் ( 
தற்போதைய அகில இந்திய வானொலி) ஒரு இசை நிகழ்ச்சி 
வழங்கியிருக்கிறார்.
      1932ம் ஆண்டு ‘மெட்ராஸ் ரசிக ரஞ்சனி சபாவில்’ மேடை கச்சேரி 

நிகழ்த்தியிருக்கிறார். அதற்குப் பிறகு ஒரு முழு நேர பாடகியாகி 

சாதித்திருக்கிறார் D.K.பட்டம்மாள் அவர்கள்.
        
       இவருக்கு, மூன்று சகோதரர்கள். அவர்கள் மூவருமே DKP யுடன் 

சேர்ந்து கச்சேரிகளில் பாடியிருக்கின்றனர். இவர்களுள், D.K.ஜெயராமன், 

D.K.Pயுடன் சேர்ந்து பல மேடைகளில் பாடியிருக்கிறார்.  அக்காவும், 

தம்பியுமாக இணைந்து பாடியது ஒருஆச்சர்யமான நிகழ்வாக 

இருந்திருக்கிறது.
        
           இவர், ‘முத்துசாமி தீக்ஷதரி’ன் சிஷ்யரான ‘அம்பி அய்யரி’டம் 

தீக்ஷதர் கிருதிகளைக் கற்றதால் அவற்றை ஆணித்தரமாகப் பாடுவதில் 

வல்லவர். ‘பாபனாசம் சிவன்’ இயற்றிய பாடல்களை நேரிடையாக 

அவரிடமே பயிலும் பேறு பெற்றவர்.  ‘அப்பாதுரை ஆச்சாரி’யிடம் தாம் 

கற்ற ‘திருப்புகழ்’, ‘தேவாரம்’ போன்றவற்றையும், ‘பாரதியாரி’ன் தேச பக்தி 

பாடல்களையும் தனது கச்சேரிகளில் பாடுவதை வழக்கமாகக் 

கொண்டிருக்கிறார். கோபாலகிருஷ்ண பாரதி, மற்றும் முத்துத் 

தாண்டவரின் பாடல்களையும், பதங்களையும் பாடி தமிழ் மொழியின் 

பெருமையைப் பறைசாற்றியிருக்கிறார்.
       
          ‘ராகம், தானம், பல்லவி’ என்பது, 20ம் நூற்றாண்டுகளில் ஆண் 

பாடகர்களால் மட்டுமே பாடப்பட்டு வந்திருக்கிறது. சவாலாக 

எண்ணப்பட்டிருந்த ‘ராகம், தானம், பல்லவியை’ப் பாடிய முதல் பெண் 

என்ற பெருமையைப் பெறுகிறார் D.K.பட்டம்மாள் அவர்கள். மிக எளிதாக, 

நுட்பமாக, கவனமாகக் கையாண்டு, சக பாடக ஜாம்பவான்களை 
ஆச்சர்யப்படுத்தியதால் ‘பல்லவி பட்டம்மாள்’ என்றே அழைக்கப்பட்டிருக்கிறார், இந்த வகையில் இசைத் துறையில் பெரும் புரட்சியே செய்திருக்கிறார் DKP அவர்கள்.அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார், DKPயைப் பற்றி ஒரு மேடையில் பேசும் போது, ‘இவர் பட்டம்மாள் இல்லை பாட்டம்மாள்’ என்று பாராட்டி இருக்கிறார்.
       கர்னாடக இசைக் கலைஞர்களில் சினிமா துறையில் நுழைந்து பாடல்கள் பாடி பிரபலம் அடைந்தவர் என்ற வரிசையிலும் D.K.பட்டம்மாள் அவர்கள் முன்னணியில் இருக்கிறார்.  பாபனாசம் சிவனால் சினிமா துறையில் அறிமுகப் படுத்தப்பட்ட இவர், தேசபக்தி மற்றும் பக்திப் பாடல்களை மட்டுமே பாட ஒப்புக் கொண்டுள்ளார். பாரதியார் பாடல்களான ‘வெற்றியெட்டு திக்கும் எட்ட’. ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ போன்றவற்றை தனது கணீரென்ற குரலாலும், தெளிவான உச்சரிப்பாலும், திரைப்படங்களில் பாடி ஒரு தேசிய எழுச்சியையும், ஒருமைப்பட்டையு,ம், ஊட்டியிருக்கிறார் என்றால் அது மிகையில்லை. ‘தூண்டிற் புழுவினைப் போல்’ தீராத விளையாட்டுப் பிள்ளை, போன்ற பாரதியாரின் பாடல்கள் பொது மக்களிடம் பரிச்சியம் ஆனதற்கு D.K.பட்டம்மாள் அவர்களின் பங்கும் உண்டு. வைஜயந்தி மாலா அறிமுகமான AVMன் ‘வாழ்க்கை’ படத்தில் இவர் பாடிய ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்ற பாடல் பட்டி தொட்டிகளிலெல்லாம் எதிரொலித்திருக்கிறது.  இவர் தனது 80 வது வயதில் இளையராஜா மற்றும் கமலஹாசன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான, ‘வைஷ்ணவ ஜனதோ’ என்ற பாடலை ‘ஹே ராம்’ என்ற திரைப்படத்திற்க்காகப் பாடியிருக்கிறார். இசைக் கருவிகள் அவர் வீட்டிற்கே கொண்டுவரப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திரைப்பட பாடல்கள் பாடும் போது, தன் பாட்டிற்கு எவரும் உதட்டசைவு கொடுக்கக் கூடாது என்ற நிபந்தனையுடனேயே பாடியிருக்கிறார் DKP அவர்கள்.  இதனால், பின்னணியில் இவர் பாடல் ஒலிக்கும், நடனக் கலைஞர்கள் அப்பாடலுக்கு நடனம் மட்டும் ஆடுவர்.
        இவர், 3வது ஃபார்ம் (8வது) வரை படித்துள்ளார்.  இசைப் பயணத்தில் தனக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்தவர்கள்,  அப்பா, மற்றும் தனது கணவர் என்று மிகப் பெருமையாகக் கூறிக்கொள்வார். இவருக்கு 21 ம் வயதில் ஈஸ்வர ஐயர் என்ற எலெக்ட்ரிகல் இஞ்சினியருடன், திருமணம் அரங்கேறியிருக்கிறது. குழந்தை திருமணங்கள் பெருமளவில் நடைபெற்றுக்கொண்டிருந்த அந்நாட்களில் இவர் தனது இசைப் பணியைப் பெரிதாக மதித்து 21 வயது வரை திருமணத்தை ஒத்திப்போட்டது பெரிய விஷயம் தான். ஈஸ்வர ஐயர், DKP பாடுவதற்கு மிகுந்த உற்சாகமும், ஒத்துழைப்பும் அளித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், குடும்பப் பொறுப்புகள், அனைத்தையும் தான் ஏற்றுக் கொண்டு, அவரை பல வெளியிடங்களுக்கு அனுப்பிக் கொடுத்து, பல மேடைகளில் பாடுவதற்கு உதவியிருக்கிறார். இதனால் அவர் தனது பணிக்கு செல்ல முடியாமல் விடுப்பு எடுக்கும்படி ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய கட்டத்தில் யார் பணியைத் தொடரலாம் என்று இருவரும் பலமாக சிந்தித்து, ஈஸ்வர ஐயர் DKP யை இசைப் பணியை தொடரும்படியும், தாம் வேலையை ராஜினாமா செய்வதாகவும் முடிவெடுத்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஈஸ்வர் ஐயர் இத்தகைய பரந்த மனப்பான்மை கொண்டவராக இருந்ததால்தான் இசை உலகின் கலைக் களஞ்சியமான DKP ஐ இந்த சமுதாயம் பெற முடிந்தது.
         இவருக்கு, சிவகுமார், லக்ஷ்மண குமார் என்று இரு மகன்கள். இருவருக்குமே இசை ஆர்வமும், இசை ஞானமும் இருந்திருக்கிறது. சிவகுமார் மிருதங்கம் பயின்று தனது 10வது வயதிலிருந்தே மேடைக் கச்சேரிகளில் தம் அம்மாவுக்கு பக்கவாத்யம் வாசித்திருக்கிறார். அவர் பாலக்காடு மணி ஐயரின் மகளான லலிதாவை, மணந்துள்ளார். இசை ஞானம் இயல்பாகவே பெற்றிருந்த லலிதா, தனது மாமியாரான DKP யிடம் சங்கீதம் பயின்று, இருவரும் சேர்ந்து கச்சேரிகளில், பாடியதும் ஆச்சர்யமான ஒரு விஷயம்தான்.  லக்ஷ்மண குமார் ஹிந்துஸ்தானி பயின்றிருக்கிறார். ஆனால் இருவருமே முழு நேர இசைக் கலைஞர்களாக இருக்கவில்லை.
சிவகுமாருக்கு, 2 மகள்கள். காயத்ரி, நித்யஸ்ரீ. இவர்கள் இருவருமே தங்கள் பாட்டி போல் நல்ல குரல் வளம் பெற்றவர்கள். நித்யஸ்ரீ மகாதேவன், மற்றும் DKP ன் கொள்ளுப் பேத்தியும், காயத்ரியின் மகளுமான லாவண்யா சுந்தர்ராமன், , இருவரும் தற்போது சங்கீதத் துறையில் பரிமளித்து, சாதனை புரிந்து வருகின்றனர்.
        லக்ஷ்மண குமாரின் மகனான ராஜ் குருவுக்கு, அரவிந்த் என்ற மகன் பிறந்தவுடன் நான்காம் தலைமுறை குழந்தை பிறந்ததை முன்னிட்டு ஹிந்து மத கலாச்சாரத்தின்படி, DKP ஈஸ்வர ஐயர் தம்பதிகளுக்கு கனகாபிஷேகம் நடந்திருக்கிறது. இத்தகைய வரப்பிரசாதம் கிடைக்க இறயருள் கிடைக்கவேண்டும். இந்த ஆதர்ஸ தம்பதிகளுக்கு அது பரிபூரணமாகக் கிட்டியிருக்கிறது.

ஞான சரஸ்வதி, சங்கீத சாகர ரத்னா, சங்கீத நாடக அகாடமி அவார்ட், சங்கீத கலானிதி, பத்ம பூஷன், சங்கீத கலாசிகாமணி, பத்ம விபூஷன், சங்கீத சரஸ்வதி போன்ற பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றவர் DKP அவர்கள்

        இவர், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் பாரதம் சுதந்திரம் பெற்ற அந்த நள்ளிரவில் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்ற பாடலை அகில இந்திய வானொலியில் பாடும் அரிய வாய்ப்பைப் பெற்றவர்.
       இப்படி, இசைத் துறையில் கால் பதித்து, வீறுநடை போட்டபடி சாத்னைகள் புரிந்த DKP அவர்கள், எங்கள் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்தது, என் மனக் கண்ணில் நிழலாடுகிறது. என் மாமாவிற்கு, DKP யின் சங்கீதத்தின் மேல் அளவு கடந்த அபிமானம் உண்டு. அவர், தன் மகளின் வீணை அரங்கேற்றத்திற்கு, DKP யை தலைமை தாங்க அழைக்க விரும்பினார். மாமாவும், மாமியும் அவர்கள் வீட்டிற்குச் சென்று அழைத்தவுடன், வருவதாக ஒப்புதல் அளித்தது மட்டுமின்றி, தன் கணவருடன் அரங்கேற்றத்திற்கு வந்து, நிகழ்ச்சி முடியும் வரை இருந்து, எங்கள் உறவினர்கள் அத்தனை பேருடனும் உரையாடி – உணவருந்திச் சென்றது மலரும் நினைவுகளாக மகிழ்ச்சியைத் தருகிறது.

        அன்னாரின் நூற்றாண்டின் போது, அவரை நினைவு கூர்ந்து, எனது அஞ்சலியையும், மரியாதையையும் வெளிப்படுத்தியதில், பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி! வணக்கம்.!

திங்கள், 28 மே, 2018

ரோஜாச் செடி

Image result for image of rose flower with thorns

'பஜ கோவிந்தம்.. பஜ கோவிந்தம்...'  M.S. குரலில் செல் ஃபோன் அழைத்தது.

'மாமா ..!'
' இவர் என்ன காலங்கார்த்தால கூப்பட்றார்?'

'ஹலோ மாமா... குட் மார்னிங் .. எப்படி இருக்கீங்க....!' என்றாள் மோகனா.

'ம்ம்... நான் இப்ப TRAIN ஏறிட்டேன்.  மதிய சாப்பாட்டுக்கு அங்க வருவேன். அது சரி.... அது என்ன.. டயல் டோன் ஒரு பாட்டு பாடுது.. மாத்து அத மொதல்ல' என்றபடி அவள் பதில் பேசும் முன் கட் செய்துவிட்டார்.

என்ன திடீர்னு கிளம்பி வராரு..!

டேய் ராகுல்.... என்னடா பாட்ட டயல் டோனா போட்ட!...  என்றபடி பரபரத்தாள் மோகனா.

ராமனாதன், மோகனாவின் தாய் மாமா. கொஞ்சம் கெடுபிடி உள்ளவர். 13 வயது வித்தியாசத்தில் பிறந்த மோகனாவின் அம்மாவும் தனது தங்கையுமான சாவித்ரியிடம் அளவு கடந்த பாசம் உடையவர். அவர்களின் அப்பா, அம்மா இருவருமே 3 மாத இடைவெளியில் இறந்த போது சாவித்ரிக்கு 15 வயது, ராமனாதனுக்கு 27 வயது.  அப்போதிலிருந்தே, தன் ஒரே தங்கைக்காகவே தன் வாழ் நாளை கழிக்கத்தொடங்கி விட்டார் ராமனாதன் தாம் திருமணமே செய்து கொள்ளவில்லை. சாவித்ரிக்கு தகுந்த வரனாகப் பார்த்து திருமணம் செய்து அவளை புகுந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தாம் மட்டும் தனியாக வாழ ஆரம்பித்தார்.

'ஏங்க.... மாமா வந்துகிட்டிருக்காரு! இன்னும் 2 மணி நேரத்துல வந்திடுவாரு'
'2 மணி நேரத்துல தானே... நல்ல வேளை நான் அதுக்குள்ள ஆஃபீஸுக்கு கிளம்பிடுவேன். நீயாச்சு உங்க மாமாவாச்சு' என்ற படி குளிக்க கிளம்பினார் ரகு.

'பஜ கோவிந்தம்...' மீண்டும் MS.அழைக்க போய் எடுத்தால் அவள் அம்மா..

'என்னம்மா... மாமா திடீர்னு கிளம்பி வரேன்னு சொல்றாரு?'

'ஆமாண்டா தங்கம்... அதுக்கு தான் ஃபோன் பண்ணினேன். நல்லா கவனிச்சு அனுப்புடா செல்லம்.  என்ன சொன்னாலும் கொஞ்சம் பொறுமையா இருடா' கெஞ்சும் குரலில் சொன்னாள் அவள் அம்மா.

அம்மாவுக்கு தன் அண்ணன் மேல் மரியாதையும், பாசமும் மட்டுமல்ல ஒருவித பக்தியே உண்டு. மோகனாவின் அப்பாவிற்கு கொஞ்ச நாள் கெட்ட சகவாசம் ஏற்பட்டுவிட்டது. பணம் எதுவும் வீட்டுக்குத் தராமல், சண்டை சச்சரவு என்று இருந்த நேரத்தில் ராமனாதன் தான் தோள் கொடுத்தார்.  மோகனாவுக்கும், அவளுடைய அக்கா கல்பனாவுக்கும் கல்யாணம் செய்துவைத்ததும் ராமனாதன் தான்.  தன் அண்ணனால்தான் தாம் இந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நன்றி உணர்ச்சியுடன் இருப்பாள் மோகனாவின் அம்மா.

'சரிம்மா... வைய்யு ஃபோனை! சிடுடுத்தாள் மோகனா.

மோகனாவுக்கும் தன் மாமா செய்த தியகங்கள் தெரியாமல் இல்லை. ஆனால் அவர் ஒரு மாதிரி டைப்.  தான் தான் எல்லா விஷயத்தையும் சரியாக செய்வது போலவும்,  மற்றவர்கள் எல்லாரும் செய்வது அபத்தமான விஷயம்  மாதிரியும் பேசுவார். யார் என்ன செய்தாலும் பாராட்டவே மாட்டார்.  அவரிடம்  எப்படி பேசுவதென்றே தெரியாது.  அவர் வந்தாலே  வீடு அமைதியாயிடும். மனதில்  குற்ற உணர்ச்சி மாதிரி ஒரு உணர்வு பிராண்டிக் கொண்டே இருக்கும்.

கெய்சர் போட்டு 'மாமா. வென்னீர் ரெடி.. நீங்க குளிக்க போகலாம்'  என்றால், குளித்துவிட்டு வந்து,  ஒன்று, 'வென்னீர் சூடே இல்ல..' என்பார். இல்லையென்றால்.. 'இப்படி கொதிக்குது தண்ணி. ஆனா விளாவ மட்டும் பக்கெட்டே இல்ல'  என்பார். ஒரே பக்கெட்டிலேயே விளாவலாமே!  அதை அவரிடம் சொல்ல முடியாது. 'ச்ச.! என்று ஒருவித வெறுப்பு உணர்வுதான் மனதில் தோன்றும்.

சாப்பாடு போடும் போதும் அப்படித்தான். என்ன சமையலாக இருந்தாலும், முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமலேயே சாப்பிடுவார். சரி, நாமாக கேட்போம் என்று 'மாமா, உப்பு, காரமெல்லாம் சரியா இருக்கா' என்றால் 'எல்லாம் ஜாஸ்தியாவே இருக்கு' என்பார். அது என்ன பதில் என்றே புரியாது. ஆனால் இரண்டு மூன்று முறை போட்டுக் கொள்வார். 'நன்றாக இருக்கிறது' என்று சொன்னால் என்னவாம்? சாப்பிடறதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல..!'  என்று கோபம் கொப்பளிக்கும்.

போன முறை வந்த போது, அவர் தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு, வாக்கிங் போய்விட்டு, வீட்டுக்குள் நுழையும் போது தடியில்லாமல் வருவதைப் பார்த்து, 'மாமா.. உங்க வாக்கிங் ஸ்டிக் எங்க..?' என்று கேட்டாள். அது ஏதோ ஒரு அர்த்தமற்ற, அவசியமற்ற கேள்வி போல ஒரு பார்வை பார்த்துக் கொண்டே,'சேறாயிடுச்சுன்னு, கழுவி வெளில வச்சிருக்கேன். என்ன.. எங்க தடி ன்னு கேள்வி கேக்கற..?' என்றபடி ஒரு சிரிப்பு சிரித்ததும் மோகனாவுக்கு தன் மேல் சேற்றை வாரியிறைத்தது போல் ஒரு அருவருப்பு தோன்றியது. அவளுக்கு எப்படித் தெரியும் அவர் தடியை கழுவி வைத்தது. எங்காவது மறதியால் வைத்துவிட்டு வந்திருக்கப் போகிறாரே என்று தானே கேட்டாள்! 'ஏனடா கேட்டோம்! என்று உள்ளம் நொந்து போய் விட்டாள் மோகனா.

இன்று அவர் வர இருக்கிறார். இம்முறை என்ன பிரளயம் வெடிக்கப் போகிறதோ என்று கலக்கத்துடன் இருந்தாள் மோகனா. ரகுவுக்கு மாமாவைப் பற்றி தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. அவரும், மாமாவும் சந்தித்துக்கொள்ளும் நேரம் மிகக் குறைவுதான். மோகனா சொல்வதிலிருந்து ரகு, மாமாவுக்கு ஒரு உருவகம் கொடுத்து இருந்தார்.  அதனால் மாமாமேல் அவருக்கும் ஒருவித பயம் உண்டு. இந்த குடும்பத்திற்காக அவர் பாடுபட்டதும் ரகுவுக்கு தெரியுமாதலால் மாமாமேல் மரியாதையும் உண்டு. 'நீதான் பொறுமையா டீல் பண்ணணும்' என்று மோகனாவிடம் சொல்லிவிடுவார்.

மாமா வருவதற்குள் வீட்டில் இருக்கும் ஒரே கட்டிலை, வாசலுக்குப் பக்கத்து அறையில் ஜன்னலோரம் இழுத்துப்போட்டாள். அவருக்கு படுக்கை தையார் செய்துவிட்டு, வீட்டின் மற்ற இடங்கள் சரியாக இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டு, பரணிலிருந்து மாமா எப்போதும் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்தும் தாமிர டம்ப்ளரையும் சொம்பையும் எடுத்தாள். ஸ்டூல் நொடித்ததோ, இவள் காலை சரியாக வைக்கவில்லையோ 'டமால்' என்ற சத்தத்துடன் கீழே விழுந்து விட்டாள். சத்தம் கேட்டு ஓடி வந்த ரகு, அவளுக்கு கை கொடுத்து எழுந்திருக்க  உதவினார். ஆனால் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. 'அய்யோ.. அப்பா' என்று அழலாம் போலிருந்தது. 'என்னங்க பண்றது..? கால் ரொம்ப வலிக்குதே! மாமா வேற வராரு' என்று சொல்லும் போதே அழுகை பீறிட்டு வந்தது 'ஷ்...! அழுகைய நிறுத்து. டாக்டர் கிட்ட போயிட்டு வந்திடலாம்' என்றபடி ஆட்டோ கூட்டி வந்தார் ரகு.

கணுக்காலில் ஃப்ராக்சர் ஆகியிருந்தது. டாக்டர் கட்டு போட்டு, முழு ஓய்வு எடுக்கச் சொல்லி, மருந்து கொடுத்து அனுப்பினார்.
 'ஏங்க.. மணி என்ன? மாமா வர்ர ட்ரெயின் எப்போ வரும்?' என்றாள் மோகனா.
 'வர்ர நேரம் தாம்மா.... இரு வீட்டுக்குப் போயிடலாம். நான் இன்னிக்கு லீவ் சொல்லிட்டேன்' என்றார் ரகு.

ஆட்டோவில் வீடு திரும்பினர். மாமா அதற்குள் வீட்டிற்கு வந்திருந்தார். ராகுல் அவரிடம் அம்மா விழுந்ததையும், அப்பாவுடன் டாக்டரிடம் போயிருப்பதையும் சொல்லியிருந்தான். ஆட்டோ சத்தம் கேட்டதும் வாசல் வரை வந்த மாமா,'ஏன் பாத்து ஏறக்கூடாது? ஒரு  ஸ்டூல் மேல கூட ஏறத் தெரியாதா உனக்கு? எல்லாத்துலயும் அஜாக்ரதை!' என்றதும் வந்த அழுகையைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டாள் மோகனா.

மாமாவும்  வந்து கைத்தாங்கலாக அவள் இறங்குவதற்கு உதவினார். மெல்ல அவளை அலுங்காமல் இருவருமாக உள்ளே அழைத்துவந்ததும்,
'இந்தா மோகனா... இந்த கட்டில்ல உக்காரு'
என்று அவருக்காக தையார் நிலையில் இருந்த கட்டிலில் உட்கார்த்திவிட்டார்.
' மாமா... அது நீங்க படுத்துக்க...' என்று மோகனா சொன்னதும்
 'நான்  அங்க உள்ளாற படுப்பேன். நீ மொதல்ல உக்காரு' என்று சொல்லிவிட்டு,
 'மாப்பிள்ள மோகனாவ அப்படியே படுக்க வைங்க. நா இதோ வரேன்' என்றபடி உள்ளே ஓடியவர் தாம் வாங்கி வந்திருந்த ஆரஞ்சை ஜூஸ் செய்து கொண்டு வந்து 'இந்தாம்மா.. இத மொதல்ல குடி' என்றார். 'மாப்பிள்ள... நீங்க காபி குடிக்கறீங்களா? ஜூஸ் தரட்டுமா? ராகுல் நீ என்ன கண்ணு சாப்பிட்ற..? என்று கேள்விகளை அடுக்கியதும்,  அழுகை பீறிட்டது  மோகனாவுக்கு. ஆனால் உணர்ச்சி மட்டும் வேறாயிருந்தது. ரோஜா செடியின் முள்ளை மட்டுமே இத்தனை நாளும் பார்த்திருக்கிறேன். இவ்வளவு மென்மையான பூ இருப்பதைப் பார்க்கத் தவறியிருக்கிறேனே!  சமையல் கட்டுக்குள் விரைந்த  மாமாவைக் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மோகனா.

பஜ கோவிந்தம்.. பஜ கோவிந்தம்...'  M.S. குரலில் செல் ஃபோன் அழைத்தது.

'மாமா ..!'
' இவர் என்ன காலங்கார்த்தால கூப்பட்றார்?'

'ஹலோ மாமா... குட் மார்னிங் .. எப்படி இருக்கீங்க....!' என்றாள் மோகனா.

'ம்ம்... நான் இப்ப TRAIN ஏறிட்டேன்.  மதிய சாப்பாட்டுக்கு அங்க வருவேன். அது சரி.... அது என்ன.. டயல் பண்ணினா ஒரு பாட்டு பாடுது.. மாத்து அத மொதல்ல' என்றபடி அவள் பதில் பேசும் முன் கட் செய்துவிட்டார்.

என்ன திடீர்னு கிளம்பி வராரு..!

டேய் ராகுல்.... என்னடா பாட்ட காலர் ட்யூன் போட்ட!...  என்றபடி பரபரத்தாள் மோகனா.

ராமனாதன், மோகனாவின் தாய் மாமா. கொஞ்சம் கெடுபிடி உள்ளவர். 13 வயது வித்தியாசத்தில் பிறந்த மோகனாவின் அம்மாவும் தனது தங்கையுமான சாவித்ரியிடம் அளவு கடந்த பாசம் உடையவர். அவர்களின் அப்பா, அம்மா இருவருமே 3 மாத இடைவெளியில் இறந்த போது சாவித்ரிக்கு 15 வயது, ராமனாதனுக்கு 27 வயது.  அப்போதிலிருந்தே, தன் ஒரே தங்கைக்காகவே தன் வாழ் நாளை கழிக்கத்தொடங்கி விட்டார் ராமனாதன் தாம் திருமணமே செய்து கொள்ளவில்லை. சாவித்ரிக்கு தகுந்த வரனாகப் பார்த்து திருமணம் செய்து அவளை புகுந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தாம் மட்டும் தனியாக வாழ ஆரம்பித்தார்.

'ஏங்க.... மாமா வந்துகிட்டிருக்காரு! இன்னும் 2 மணி நேரத்துல வந்திடுவாரு'
'2 மணி நேரத்துல தானே... நல்ல வேளை நான் அதுக்குள்ள ஆஃபீஸுக்கு கிளம்பிடுவேன். நீயாச்சு உங்க மாமாவாச்சு' என்ற படி குளிக்க கிளம்பினார் ரகு.

'பஜ கோவிந்தம்...' மீண்டும் MS.அழைக்க போய் எடுத்தால் அவள் அம்மா..

'என்னம்மா... மாமா திடீர்னு கிளம்பி வரேன்னு சொல்றாரு?'

'ஆமாண்டா தங்கம்... அதுக்கு தான் ஃபோன் பண்ணினேன். நல்லா கவனிச்சு அனுப்புடா செல்லம்.  என்ன சொன்னாலும் கொஞ்சம் பொறுமையா இருடா' கெஞ்சும் குரலில் சொன்னாள் அவள் அம்மா.

அம்மாவுக்கு தன் அண்ணன் மேல் மரியாதையும், பாசமும் மட்டுமல்ல ஒருவித பக்தியே உண்டு. மோகனாவின் அப்பாவிற்கு கொஞ்ச நாள் கெட்ட சகவாசம் ஏற்பட்டுவிட்டது. பணம் எதுவும் வீட்டுக்குத் தராமல், சண்டை சச்சரவு என்று இருந்த நேரத்தில் ராமனாதன் தான் தோள் கொடுத்தார்.  மோகனாவுக்கும், அவளுடைய அக்கா கல்பனாவுக்கும் கல்யாணம் செய்துவைத்ததும் ராமனாதன் தான்.  தன் அண்ணனால்தான் தாம் இந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நன்றி உணர்ச்சியுடன் இருப்பாள் மோகனாவின் அம்மா.

'சரிம்மா... வைய்யு ஃபோனை! சிடுடுத்தாள் மோகனா.

மோகனாவுக்கும் தன் மாமா செய்த தியகங்கள் தெரியாமல் இல்லை. ஆனால் அவர் ஒரு மாதிரி டைப்.  தான் தான் எல்லா விஷயத்தையும் சரியாக செய்வது போலவும்,  மற்றவர்கள் எல்லாரும் செய்வது அபத்தமான விஷயம்  மாதிரியும் பேசுவார். யார் என்ன செய்தாலும் பாராட்டவே மாட்டார்.  அவரிடம்  எப்படி பேசுவதென்றே தெரியாது.  அவர் வந்தாலே  வீடு அமைதியாயிடும். மனதில்  குற்ற உணர்ச்சி மாதிரி ஒரு உணர்வு பிராண்டிக் கொண்டே இருக்கும்.

கெய்சர் போட்டு 'மாமா. வென்னீர் ரெடி.. நீங்க குளிக்க போகலாம்'  என்றால், குளித்துவிட்டு வந்து,  ஒன்று, 'வென்னீர் சூடே இல்ல..' என்பார். இல்லையென்றால்.. 'இப்படி கொதிக்குது தண்ணி. ஆனா விளாவ மட்டும் பக்கெட்டே இல்ல'  என்பார். ஒரே பக்கெட்டிலேயே விளாவலாமே!  அதை அவரிடம் சொல்ல முடியாது. 'ச்ச.! என்று ஒருவித வெறுப்பு உணர்வுதான் மனதில் தோன்றும்.

சாப்பாடு போடும் போதும் அப்படித்தான். என்ன சமையலாக இருந்தாலும், முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமலேயே சாப்பிடுவார். சரி, நாமாக கேட்போம் என்று 'மாமா, உப்பு, காரமெல்லாம் சரியா இருக்கா' என்றால் 'எல்லாம் ஜாஸ்தியாவே இருக்கு' என்பார். அது என்ன பதில் என்றே புரியாது. ஆனால் இரண்டு மூன்று முறை போட்டுக் கொள்வார். 'நன்றாக இருக்கிறது' என்று சொன்னால் என்னவாம்? சாப்பிடறதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல..!'  என்று கோபம் கொப்பளிக்கும்.

போன முறை வந்த போது, அவர் தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு, வாக்கிங் போய்விட்டு, வீட்டுக்குள் நுழையும் போது தடியில்லாமல் வருவதைப் பார்த்து, 'மாமா.. உங்க வாக்கிங் ஸ்டிக் எங்க..?' என்று கேட்டாள். அது ஏதோ ஒரு அர்த்தமற்ற, அவசியமற்ற கேள்வி போல ஒரு பார்வை பார்த்துக் கொண்டே,'சேறாயிடுச்சுன்னு, கழுவி வெளில வச்சிருக்கேன். என்ன.. எங்க தடி ன்னு கேள்வி கேக்கற..?' என்றபடி ஒரு சிரிப்பு சிரித்ததும் மோகனாவுக்கு தன் மேல் சேற்றை வாரியிறைத்தது போல் ஒரு அருவருப்பு தோன்றியது. அவளுக்கு எப்படித் தெரியும் அவர் தடியை கழுவி வைத்தது. எங்காவது மறதியால் வைத்துவிட்டு வந்திருக்கப் போகிறாரே என்று தானே கேட்டாள்! 'ஏனடா கேட்டோம்! என்று உள்ளம் நொந்து போய் விட்டாள் மோகனா.

இன்று அவர் வர இருக்கிறார். இம்முறை என்ன பிரளயம் வெடிக்கப் போகிறதோ என்று கலக்கத்துடன் இருந்தாள் மோகனா. ரகுவுக்கு மாமாவைப் பற்றி தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. அவரும், மாமாவும் சந்தித்துக்கொள்ளும் நேரம் மிகக் குறைவுதான். மோகனா சொல்வதிலிருந்து ரகு, மாமாவுக்கு ஒரு உருவகம் கொடுத்து இருந்தார்.  அதனால் மாமாமேல் அவருக்கும் ஒருவித பயம் உண்டு. இந்த குடும்பத்திற்காக அவர் பாடுபட்டதும் ரகுவுக்கு தெரியுமாதலால் மாமாமேல் மரியாதையும் உண்டு. 'நீதான் பொறுமையா டீல் பண்ணணும்' என்று மோகனாவிடம் சொல்லிவிடுவார்.

மாமா வருவதற்குள் வீட்டில் இருக்கும் ஒரே கட்டிலை, வாசலுக்குப் பக்கத்து அறையில் ஜன்னலோரம் இழுத்துப்போட்டாள். அவருக்கு படுக்கை தையார் செய்துவிட்டு, வீட்டின் மற்ற இடங்கள் சரியாக இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டு, பரணிலிருந்து மாமா எப்போதும் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்தும் தாமிர டம்ப்ளரையும் சொம்பையும் எடுத்தாள். ஸ்டூல் நொடித்ததோ, இவள் காலை சரியாக வைக்கவில்லையோ 'டமால்' என்ற சத்தத்துடன் கீழே விழுந்து விட்டாள். சத்தம் கேட்டு ஓடி வந்த ரகு, அவளுக்கு கை கொடுத்து எழுந்திருக்க  உதவினார். ஆனால் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. 'அய்யோ.. அப்பா' என்று அழலாம் போலிருந்தது. 'என்னங்க பண்றது..? கால் ரொம்ப வலிக்குதே! மாமா வேற வராரு' என்று சொல்லும் போதே அழுகை பீறிட்டு வந்தது 'ஷ்...! அழுகைய நிறுத்து. டாக்டர் கிட்ட போயிட்டு வந்திடலாம்' என்றபடி ஆட்டோ கூட்டி வந்தார் ரகு.

கணுக்காலில் ஃப்ராக்சர் ஆகியிருந்தது. டாக்டர் கட்டு போட்டு, முழு ஓய்வு எடுக்கச் சொல்லி, மருந்து கொடுத்து அனுப்பினார்.
 'ஏங்க.. மணி என்ன? மாமா வர்ர ட்ரெயின் எப்போ வரும்?' என்றாள் மோகனா.
 'வர்ர நேரம் தாம்மா.... இரு வீட்டுக்குப் போயிடலாம். நான் இன்னிக்கு லீவ் சொல்லிட்டேன்' என்றார் ரகு.

ஆட்டோவில் வீடு திரும்பினர். மாமா அதற்குள் வீட்டிற்கு வந்திருந்தார். ராகுல் அவரிடம் அம்மா விழுந்ததையும், அப்பாவுடன் டாக்டரிடம் போயிருப்பதையும் சொல்லியிருந்தான். ஆட்டோ சத்தம் கேட்டதும் வாசல் வரை வந்த மாமா,'ஏன் பாத்து ஏறக்கூடாது? ஒரு  ஸ்டூல் மேல கூட ஏறத் தெரியாதா உனக்கு? எல்லாத்துலயும் அஜாக்ரதை!' என்றதும் வந்த அழுகையைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டாள் மோகனா.

மாமாவும்  வந்து கைத்தாங்கலாக அவள் இறங்குவதற்கு உதவினார். மெல்ல அவளை அலுங்காமல் இருவருமாக உள்ளே அழைத்துவந்ததும்,
'இந்தா மோகனா... இந்த கட்டில்ல உக்காரு'
என்று அவருக்காக தையார் நிலையில் இருந்த கட்டிலில் உட்கார்த்திவிட்டார்.
' மாமா... அது நீங்க படுத்துக்க...' என்று மோகனா சொன்னதும்
 'நான்  அங்க உள்ளாற படுப்பேன். நீ மொதல்ல உக்காரு' என்று சொல்லிவிட்டு,
 'மாப்பிள்ள மோகனாவ அப்படியே படுக்க வைங்க. நா இதோ வரேன்' என்றபடி உள்ளே ஓடியவர் தாம் வாங்கி வந்திருந்த ஆரஞ்சை ஜூஸ் செய்து கொண்டு வந்து 'இந்தாம்மா.. இத மொதல்ல குடி' என்றார். 'மாப்பிள்ள... நீங்க காபி குடிக்கறீங்களா? ஜூஸ் தரட்டுமா? ராகுல் நீ என்ன கண்ணு சாப்பிட்ற..? என்று கேள்விகளை அடுக்கியதும்,  அழுகை பீறிட்டது  மோகனாவுக்கு. ஆனால் உணர்ச்சி மட்டும் மாறுபட்டிருந்தது.  ஜூஸ் டம்பளரை வாங்கும்போது, கொஞ்சம் தளும்பி அவள் புடவையில் தெறித்துவிட்டது.  ' அடாடாடாடா..! என்ன! ஒரு ஜூஸ் டம்ப்ளரைக் கையில புடிக்கத் தெரியல!' என்றபடி உள்ளேயிருந்து ஒரு துணி கொண்டு வந்து அவள் புடவையையும், வாயையும் துடைத்து விட்டார் மாமா.  கண்ணீர் தளும்பும் கண்களுடன் ஒரு புன்னகையும் அவள் உதட்டில் பூத்தது.  ரோஜா செடியின் முள்ளை மட்டுமே இத்தனை நாளும் பார்த்திருக்கிறேன். இவ்வளவு மென்மையான பூ இருப்பதைப் பார்க்கத் தவறியிருக்கிறேனே!  
அடுத்த வேலையைக் கவனிக்க சமையல் கட்டுக்குள் விரைந்த  மாமாவைக் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மோகனா.

லக்ஷ்மி ரவி,
94868 35904

ஞாயிறு, 13 மே, 2018

இன்றைய பெண்களும், எண்ணெய்க் குளியலும்.

 'அம்மா, கண்ணெல்லாம் பொங்கியிருக்கும்மா. ரொம்ப எரியறது' என்றபடி வந்தாள் என் அருமை மகள்.

'அம்மாடி, வெய்யில் கொளுத்தறது. சூடு தான். இரு, தலைக்கு நல்லெண்ணெய் வச்சு விடறேன். எண்ணெய் தேய்ச்சு குளிச்சு நாளாறது இல்லையா!' என்றது தான் தாமதம்.

'ஐய்யய்ய.. எண்ணெயெல்லாம் வேண்டாம்' என்று, நான் எதோ அருவருப்பான் செயல் செய்ய சொன்னது போல் முகத்தை சுளித்தாள்.

'கண்ணுல ஐஸ் வச்சுண்டா சரியா போயிடும்' என்றாள்.
'இல்லை தங்கம்.. ஐஸும் சூடுதான். வச்சுக்கும்போது சரியா போற மாதிரி இருக்கும். கம்ப்ளீட்டா குணமாகாது' ன்னு நான் சொன்னாலும் அவள் எண்ணெய்க் குளியலுக்குத் தயாராகவில்லை.

             என்ன செய்யறது இந்த காலக் குழந்தைகளை..! எங்க அம்மான்னா விடவே மாட்டாளே!.. வெள்ளிக்கிழமை வரவேண்டியது தான். அன்னிக்கு பெரிய இலுப்பச்சட்டில நல்லெண்ணெய ஊத்தி, அதுல மிளகும், மொத நாளே வாங்கி வச்சிருந்த வெத்தலையையும் கிள்ளிப் போட்டு 'பட பட' ன்னு மிளகு வெடிக்கற வர காய்ச்சி வச்சுடுவா. பின்னாடி கொல்லைகட்டுல பெரிய அண்டால அடுப்பு பத்த வச்சு வென்னீர் போட்டுடுவா. அம்மா இதெல்லாம் ரெடி பண்றதுக்குள்ள நானும் என் அண்ணாவும், அவா அவா டிரெஸ்ஸோட 2 காசித்துண்டை எடுத்து வச்சுடணும், அப்புறம், எண்ணெய் தேய்ச்சு முடிச்சதும் சம்பிராணி போடறதுக்காக, தூபக்கால், சாம்பிராணி டப்பா, மூங்கில் கூடை இதெல்லாம் 2ம் தாவாரத்துல ரெடியா வச்சிருக்கணும். இது எப்போதும் என்னோட வேலை. அண்ணா, அவன் டிரஸ் மட்டும்தான் எடுத்து வைப்பான்.

               எண்ணெய் கை பொறுக்கற சூடு வந்ததும், அம்மா, ''அஸ்வத்தாமா, மஹாபலி, வ்யாஸர், விபீஷ்ணர், க்ருபர், அனுமார், பரசுராமர் என்று  7 சிரஞ்சீவிகள் பேர சொல்லிண்டே எண்ணெயால் தொடையில் ஒவ்வொரு புள்ளியாக வைப்பார். பின் 'கௌரி கல்யாண வைபோகமே...' என்று பாடிண்டே, உச்சந் தலையில் ஒரு கை எண்ணையை வைச்சு சூடு பறக்க தேய்ப்பார். பின் மண்டை முழுதும், மயிர் கால்களில் நன்னா பட்ற மாதிரி உருவி உருவி தேய்ப்பார். அம்மா கைகளில் வழியற  எண்ணெயை முகம், கன்னம், கண், காது மடல், மூக்கு, புருவம் எல்லா இடத்திலும்  மசாஜ் பண்ணி விடுவா. 'மூஞ்சி தேய்ச்சுக்காம இருக்கக் கூடாது' என்று எப்போதும் சொல்லுவார். அப்புறம், எங்கிட்ட ஒரு கிண்ணி, எணணெயைக் குடுத்து, பாத்ரூமுக்குள்ள போய் உடம்பு முழுக்க தேய்ச்சுக்கச் சொல்லுவா. அதுக்கு அரை மணி ஆயிடும்
.'எண்ணெய் வச்சுண்டு அரை மணியாவது ஊரணும்'னு சொல்லிண்டே இருப்பா. நான் உடம்புக்கு தேய்ச்சுக்கறதுக்குள்ள அண்ணாவுக்கு, எண்ணை தேய்ச்சு, சீயக்காயும் தேய்ச்சு, காசித்துண்டால நன்னா, கரகரன்னு துவட்டி விட்டு, 'சாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டு வீபூதி இட்டுக்கோ' ன்னு சொல்லி, உள்ள அனுப்பிடுவா.

              அப்புறம் எனக்கு. கரகரன்னு, சீயக்கயெ வச்சு தேய்ச்சுவிடுவா. இப்பொ மாதிரி, நுரை வர்ர சீயக்கா பொடியெல்லாம் கிடையாது. அம்மாவே சீயக்காவ காய வச்சு, என்னவெல்லாமோ அதோட போட்டு அரைச்சு வச்சிருப்பா.

             உடம்பு முழுசும் சொதசொத ன்னு எண்ணைய் தடவிக்கணும் ஆனா, சோப் போட்டுக்கக் கூடாதுன்னு சொல்லிடுவா. சீயக்காயவே உடம்பு முழுக்க தடவிக்காணும். அப்புறம் நல்ல கஸ்தூரி மஞ்சப்பொடிய உடம்பு முழுக்க தேய்ச்சுக்கணும். நல்ல பதமான சூட்டுல வென்னீர அம்மாவே மொண்டு மொண்டு தலைக்கு ஊத்தி நன்னா அலசுவா. அப்புறம் காசித் துண்டால துவட்டி, ஆத்தி விட்டுட்டு,  சாம்பிராணி ரெடி பண்ண போயிடுவா. நான் டிரஸ் போட்டுண்டு வெளில வர்ரதுக்கும், புகை மூட்டத்துக்கு நடுவுல அம்மா வர்ரதுக்கும் சரியா இருக்கும்.

                 பிரம்பு கூடைக்கு அடில சாம்பிராணி தூபக்கால வச்சு, கூடை மேல தல மயிர விரிச்சு படுத்துக்க சொல்லுவா பாருங்கோ.... அப்படியே தூக்கம் கண்ண அழுத்தும். ஒத்த ஒத்த மயிரா நன்னா ஆத்தி விட்டுட்டு, ஸ்வாமிக்கு நம்ஸ்காரம் பண்ணிட்டு, குங்குமம் இட்டுக்கச் சொல்லுவா.

              தல மயிர 'எண்ணைய் தேச்சுக்கற' பின்னல்னு ஒண்ணு பின்னி விடுவா. இந்த கால ஹேர் ஸ்டைல்'லாம் தோத்துப் போயிடும்.

                10 நிமிஷத்துல சாப்பிட வந்துடணும். அன்னிக்கு  நல்ல மிளகு சீரக ரசம், பருப்பு துவையல், சுட்ட அப்பளம் இது தான் பெரும்பாலும் மெனுவா இருக்கும்.  சுட சுட ரசம் சாதம் தொட்டுக்க பருப்பு தொகையலும், சுட்ட அப்பளமும். பக்கத்துல உக்காந்து அம்மா பரிமாருவா...

              ம்ம்ம்ம்.... இதெல்லாம் இந்த காலக் குழந்தைகளுக்கு எங்க தெரியப் போறது. நாமெல்லாம் அம்மா சொன்னா கேக்கணும் னு இருப்போம். இப்போ தான் ஏகப்பட்ட தகவல் தொழில் நுட்பங்கள் இருக்கே. எல்லாமே அவாளுக்கே தெரியும்ங்கற மாதிரியும், அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாதுங்கற மாதிரின்னா இருக்கா.

            நான் இப்படி ஏதேதோ நினைச்சுண்டு இருக்கும் போதே, 'அம்மா.... கண் எரிச்சல் இன்னும் சரியாகலியே!' என்றபடி வந்தாள் என் அருமை பெண்.

           ' நான் ஒண்ணு சொல்லட்டா... எங்கம்மா எனக்கு தேய்ச்சு விட்ட மாதிரி உனக்கு எண்ணைய் தேய்ச்சு விடட்டுமா? உன் டூ வீலருக்கு, டைலரிங்க் மிஷினுக்கு  ஆயில் போடறது இல்லையா... அது மாதிரி தான்! உடம்பும் ஒரு மிஷின் தானே! ' என்று கேட்டேன்.

          'சரி' யென்று அரை மனதாக ஒப்புக்கொண்டாள்.

          உடனே மிளகை வெடிக்கவிட்டு எண்ணைய் காய்ச்சினேன். வெத்தலைக்கு நான் எங்க போறது..?

        'அம்மா... எண்ணைய் மட்டும் வச்சுவிடு. சீயக்காய் வேண்டாம். நான் ஷாம்பூதான் போட்டுப்பேன்' என்றாள்.

      'இல்லடா... ஷாம்பு போட்டா, தலை கம்ப்ளீட்டா டிரை ஆயிடும். நான் உனக்கு நுரையும் வர்ர மாதிரி ஒண்ணு தேய்ச்சு விடறேன் பாரு' என்றேன்.

     ' என்னம்மா நீ...' சலித்தபடி குளிக்க வந்தாள்.

      மொதல்ல நான் எங்க அபார்ட்மெண்ட் கீழ இருக்கற  செம்பருத்தி மரத்துலேர்ந்து 10, 15  இலையை பறிச்சுண்டு வந்து  ஊற வச்சேன். அப்புறம், கெய்ஸரை ஆன் பண்ணிட்டு, ஒரு ஸ்டூலை பாத்ரூமுக்குள் போட்டு அவளை உட்காரச் சொன்னேன். தலை முழுக்க என் அம்மாவ நினைச்சுண்டே மசாஜ் பண்ணினேன். அரை மணி நேரம் ஊறணும் னு சொல்லிட்டு உடம்புக்கு தேய்ச்சுக்க சொல்லிட்டு,  அரக்க பரக்க கிச்சனுக்கு வந்து, பருப்பு துவையலுக்கு வறுத்துட்டு, மிளகு ரசத்தை அடுப்பில் ஏத்தினேன். ஊற வச்ச இலைய  மிக்சில போட்டு நன்னா அரைச்சேன். கொழ கொழன்னு பச்சை கலர்ல அந்த பேஸ்ட்டை ஒரு பேசின்ல எடுத்துண்டேன்.

     'அம்மா.... வாம்மா... கண்ணுலேர்ந்து தண்ணியா வர்ரது. என்னம்மா நீ.. கண்ணு இன்னும் நன்னா எரியறது' ன்னு கூச்சல் போட்டதும், ஓடி வந்து கர கரன்னு,  சீயக்காயோட இந்த பேஸ்ட்டையும்  சேர்த்து தேய்ச்சு விடறேன். அந்த கொழ கொழப்புனால  நுரையும் வந்தது. அம்மா மாதிரியே பதமான சூட்டுல வென்னீர ஊத்தி அலசிட்டு நன்னா குளிச்சுட்டு வா' ன்னு சொல்லிட்டு ரசத்தை விளாவப் போறேன்.

       'அம்மா....' அலறல் பாத்ரூம்லேர்ந்து. 'என்னம்மா இது? பாத்ரூம் கண்ணாடி, டைல்ஸ், பக்கெட், டாய்லெட் க்ளாஸெட் எல்லாம் ஒரே சீயக்காயா தெறிச்சு இருக்கு?'

என்ன பண்றது? அபார்ட்மெண்ட்ல சின்ன பாத்ரூம். அப்படிதான் தெறிக்கும். முன்ன பின்ன எண்ணெய் தேய்ச்சிண்டிருந்தாதானே?

'இங்க பாரு.. அப்படித்தான் இருக்கும். எல்லாத்தையும் வாஷ் பண்ணிட்டுதான் வரணும். டைல்ஸ்ல எண்ணையா இருக்கும். அந்த ஃப்ளோர் க்ளீனர ஊத்தி அழுத்தி தேய்ச்சுவிட்டுட்டு வா' ன்னு சத்தம் போட்டேன்.

        அப்பாடி ஒரு வழியா குளிச்சுட்டு வந்தா. தலைக்கு டிரையர்தான் போட்டுண்டா. அப்புறம் 'அம்மா பசிக்கறது மா'ன்னா.

        'போய் ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டு குங்குமம் இட்டுண்டு வா. சாப்பிடலாம்.'

       சுடச் சுட ரசம் சாதம், தொட்டுக்க பருப்பு துவையலும், சுட்ட அப்பளமும் போட்டேன். ரசித்து சாப்பிட்ட மகளை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

      கொஞ்ச நேரத்துல அசந்து தூங்கிட்டா.

      சாயங்காலமே 'கலகல' ன்னு உடம்பு இருக்குன்னா.

     அடுத்த நாள் 'அம்மா... கண்ணு பொங்கவேயில்ல மா'ன்னு சொல்லிண்டே வந்து காட்டிண்டாள்.

      எண்ணைய்க் குளியல் மட்டுமா என்ன..? பழமையென்ற பெயரில் நாம் மறந்த பொக்கிஷங்கள் எத்தனை? எத்தனை?  நம் முன்னோர்கள் அறிவு பூர்வமாக நடைமுறையில் வைத்திருந்த பல விஷயங்கள் இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு, நாம் அவற்றைப் பின்பற்றாமல் இருக்கிறோமே! அவை அடுத்த தலைமுறைக்கு தெரியாமலேயே போகப் போகிறது.

Image result for image of a college girl having hair wash