செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

திரு.கோபாலன் அவர்களின் சதாபிஷேக விழாவிற்காக பாடப்பட்டது. (நெஞ்சுக்கு நீதியும் மெட்டு)

எல்.ஐ.சி. நிறுவன ஊழியராகவே
நேர்மையாய் பணிபுரிந்தார்..!
கல்வியே கண்ணென, கற்பதே வாழ்வென
கருத்தொன்றைக் கொண்டிருந்தார்.
எல்லை கடந்திட்ட ஆர்வத்துடன் - இவர்
பல்வகை நூல் பயின்றார்.
நல்லிதயம் கொண்ட வல்லவராம் இவர்
வாழ்கவே! வாழ்கவே! வாழ்கவே!

கடமையை செம்மையாய் முடித்தபின் காலத்தை
பொன்னைப் போல் போற்றிவந்தார்.
கணினி, டைப்பிங்க், வாட்ஸப், ஃபேஸ்புக்
சகலமும் அறிந்து கொண்டார்.
விடுதலை வீரர்கள் வாழ்வினைத் தொகுத்து,
வடிவமைத்தே கொடுத்தார்.
நாட்டியம், சரித்திரம்,  பாரதி இயக்கத்தின்
தலைவர், செயலர், தொண்டர்.

அன்பிற்கு இலக்கண மாகவே வாழ்ந்திடும்
அற்புத மாமனிதர்.
பண்பிற்கு சிகரமாய் பலருக்கும் உதவிடும்
பற்றுள்ள மேதையிவர்!
எண்ணில் அடங்கிடா தொண்டுகள் செய்தல் போல்
அன்னமும் செய்திடுவார்..
தூண்டுகோல் போன்றவர், துணிவினைத் தருபவர்
அவர்தாள் வீழ்ந்து, பணிவோம்!

'தெறி' பட பாடல் 'தாய்மை வாழ்கென' - 18..2.2018. அப்பா, அம்மாவின் சதாபிஷேகம்

சிம்மக்குரலுடன் யானை பலத்துடன்,
நாயகன் இவராரோ!
கண்கள் கூர்மையும் எண்ணத்தூய்மையும்
கொண்டவர் இவர் யாரோ.?
அந்த நாள் கொண்ட குறிக்கோளினை,
இந்த நாளும் மாற்றாமல்..
அன்பு கோட்டையை ராணி கை கோர்த்து
ஆட்சி செய்பவர் யாரோ...?  (சிம்மக்)


திரு நாள் மிக நல்ல நாள் இன்று
கூடியாடியே மகிழ்வோம்!
நாயகன் இவர் நாயகி எங்கள்
தாத்தா பாட்டியென உரைப்போம்!
இறைவா உன்னை பணிவோம் இன்று
மறவாதிரு மனமே!
இனிதாகவே துணையாய் இரு
தொழுவோம் அனுதினமே!