புதன், 1 மார்ச், 2017

சௌமித்ரி, சௌரபி இருவரும் ஒரே மேடையில் ஆடிய பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றிற்கு நான் அளித்த தொகுப்புரையும், அறிவிப்பும்.!

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்.

    உள்ளக குறிப்புகளை - கண், கை, முதலிய உறுப்புகளின் இயக்கங்களின் மூலம் வெளிப்படுத்தக் கூடியது ஆடற்கலை. கலைகளில் எல்லாம் மிகச் சிறந்ததாகப் போற்றப்படும் பரதக் காலை ஒரு சாத்திரமாகும்.
   
     அதற்கு இலக்கணம், செய்முறை, சரித்திரம் மூன்றும் உண்டு.

     அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்க வல்லது இப்பரதக்கலை.

     பாரத கலாச்சாரத்தின் சூடாமணியாக ஒளி வீசுவது நாட்டியக்கலை. இது காலத்தால் மூத்தும், இளமை குன்றாத சிறப்புத்தன்மை வாய்ந்தது.

     சுமார் 2000 ஆண்டுகளாக நம் நாடெங்கும் பரவிக் கிடைக்கும் இப் பழம்பெரும் கலைக்கு 'பரதர்' என்னும் முனிவர் இலக்கணம் வகுத்துள்ளார். 'நாட்டிய சாஸ்த்திரம்' எனும் இவ்விலக்கண நூல்தான் உலகிலேயே தொன்மை வாய்ந்தது.

     வசன நாடகம், இசை நாடகம், நடன நாடகம் ஆகிய மூன்றும் ஒருங்கே இணைந்த தன்மை உடைய கலைதான் நாட்டியம்.

     இப்பொழுது, திருமதி. கீதா ஸ்வமிநாதன்  அவர்கள் நடத்திவரும் 'பாரதக்ஷேத்ரா நாட்டியாலயா' மாணவிகள் வழங்கும் நடன நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளன.

    இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கவந்திருக்கும்