நலம் 13.4.2018,
தஞ்சாவூர்.
அன்புள்ள கடவுளுக்கு,
அநேக கோடி நமஸ்காரங்கள். இங்கு வீட்டில் அனைவரும் நலம். அதையே அங்கும் விழைகிறேன். நிற்க..
நீவீர் ஆணா, பெண்ணா, இருபாலருமா, என்பதல்ல என் கேள்வி. நீர் யாராக இருந்தாலும், கண்டிப்பாக இருக்கிறீர் என்பதில் ஐயமில்லை. அதனால் தான் இக்கடிதம்.
நீங்கள் கற்பனைதிறன் மிக்க திறமைசாலி என்பதை உங்கள் படைப்புகளால் நிரூபிக்கிறீர். என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு முகத்தையும் பார்க்கும் போது, சிறு மாறுபாட்டைக்கொடுத்து எப்படி இத்தனை விதமான உருவங்களை உருவாக்கியுள்ளீர்கள் என்று நான் வியப்பது வழக்கம்.
சில நேரங்கள் ஆண்,பெண் இருபாலினரைத் தவிர்த்து, மூன்றாம் பாலை உருக்குவதும், சிறு குறைபாட்டுடன் சிலரைப் படைப்பதும், தவறுதலா அல்லது புதுமை செய்யும் முயற்சியா என்று நான் நினைப்பதுண்டு.
உங்கள் படைப்புகளை சற்று கூர்ந்து நோக்கத் தொடங்கினேன். அதில் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதாவது....
பருவ வயதாகும் போது, இரு பாலருக்கும் உடலளவில் சில மாறுதல்கள் ஏற்பட்டாலும், ஒரு மனிதக் குழந்தை பிறக்கும்போது, எல்லா அடிப்படை உறுப்புகளுடனேயே பிறக்கின்றன. அப்படி இருக்கையில் பற்களை மட்டும் ஏன் கடவுளே விட்டு வைத்தீர்? பற்களில்லாமல் பிறக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் ஏன் பால் பற்கள் முளைக்கின்றன? அவை ஒவ்வொன்றாய் விழுகின்றன. பின் முளைக்கின்றன. பால் பற்கள் வருசையாய் வளர்ந்தாலும், மீண்டும் முளைக்கும் பற்கள் கோணலாய் முளைக்கின்றன. அப் பற்களும், இடையிலே ஏன் கடவுளே ஒவ்வொன்றாய் விழுகின்றன? ஒவ்வொரு பல்லுக்கும் ஒவ்வொரு பிரச்சனை வருகிறது? பல் இருப்பதில்லை. ஆனால் பசி இருக்கிறது. பல் சொத்தையாகிறது. தேய்ந்து போகிறது. பற்களால் கடித்து தானே சாப்பிட்டாக வேண்டும்? மனிதர்கள் பல்செட் என்று கண்டுபிடித்து, ஒவ்வொரு பல்லுக்கும் ஒரு டாக்டர் என்ற அளவில் ஏதேதோ செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நீங்கள் ஏன் பற்களுக்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்து பார்க்கக்கூடாது? பல் பிரச்சனைகளை சந்திக்காத மனிதர்களே இல்லை என்ற நிலை உள்ளது.
நீங்கள் தயை கூர்ந்து, இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்யவேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் பதில் கடிதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
தவறு இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.
தங்கள் அன்புள்ள,
லக்ஷ்மி ரவி.
எழுத்தாளர்,
தஞ்சாவூர்.
pincode.613 001
ph: 94868 35904
உறைமேல் முகவரி,
கடவுள்,
படைப்பாளர்,
பூமி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக