STUDENTS - ஏ கேளுங்க! PARENTS -ஏ கேளுங்க!


ஏன் இந்த FOREIGN மோகம்?
தாயக உணர்வினைத் தாரையே வார்த்திட்டு
அயலகம் செல்லும் தாகம்?
அறிவையும், திறனையும் வளர்த்த நம் தேசத்தை
உயர்த்திட மறுப்பது சரிதானா...?
வாய்ப்புகள் வகையாய் இருக்குது இங்கு
உணர்வீர்!உணர்வீர்! உணர்வீர்!
கல்வியைக் கொடுத்திட GOVERNMENT SPEND
பண்ணுது
பல்லாயிரம் ரூபாய்
EARNINGS - ஐ DOLLER -இல் செய்திடத் துடிப்பது
தோன்றலியா CHEAP - ஆய் ?
கை கட்டி சேவகம் செய்வதை விடுத்து
கட்டளையிடத் துவங்கு...
உற்பத்தித் துறையை வளர்த்திடச் செய்து
ஊதியம் தரவும் துவங்கு.
மூளையை அடகு வைத்தபின் வசதியாய்
வாழ்கிறீர் முறைதானா...?
நாசாவை இயக்குது இந்திய மூளைதான்
நமக்கிது பெருமைதானா ...?
corruption -ம் pollution -ம் மிகுதிதான் இங்கென..
மறுக்கலை, மறுக்கவில்லை
உனையன்றி வேறு யார் இதை மீட்பர்
நீதான்! நீதான்! நீதான்!
உனக்கென அடித்தளம் நிறையவே இருக்குது
உனக்கது புரியலியா..?
சி.வி.ராமனும், அப்துல் கலாமும்
சாதனை நிகழ்தலியா..? சுயநலப் போர்வையைச் 'சுதந்திரம்' என நீ
சொல்வது உறைக்கலியா...?
உலகினில் இந்தியா முதல் இடம் என்றே
முழங்கு! முழங்கு! முழங்கு!
தாய் திரு நாட்டின் citizen ஆய் வாழவே
கர்வப்படல் வேண்டும்.
அந்நிய நாட்டினில் third rate citizen ஆய்
தாழ்ந்திடவா வேண்டும்....?
பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்வது
அமெரிக்கன் தானென்றால்
Golden Cage -இல் அடைபட்ட tigers நாம்
விழிப்போம்! எழுவோம்! உழைப்போம்!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக