வெள்ளி, 10 ஜூலை, 2020

'பிரதி'


                                பிரதி
ஒரு கடையில் ‘பிரதி செவ்வாய் விடுமுறை’ என்ற போர்டு வைக்கப்பட்டிருந்தது. ‘பிரதி செவ்வாய் விடுமுறை’ என்றால் ஒவ்வொரு செவ்வாயும் விடுமுறை என்ற பொருள் வருகிறது. ‘பிரதி’ என்ற சொல் இந்த இடத்தில் மட்டும்தான் வருமா? இந்த இடத்தில் ஒவ்வொரு என்றே போடலாமே! ‘பிரதி’ என்பதற்கு விசேஷமாக ஏதாவது பொருள் இருக்கிறதா? தினம் என்பதைக் குறிக்கும்போதுதான் ‘பிரதி’ என்று வருகிறதா…….இப்படி பல கேள்விகள் என்னுள்ளே எழுந்தது.
இந்த இதழ் பிரதி ரூ.25.’ என்று கேள்விப்பட்டிருக்கிறோமே! இந்த இடத்தில் ‘ஒவ்வொன்றும்’ என்ற பொருள் வருகிறது. அதாவது ‘EACH’ ‘ஒவ்வொரு. ஒவ்வொன்று’ என்பதற்கு பிரதி’ என்ற சொல் உபயோகப்படுத்தப்படுகிறது என்ற முடிவுக்கு வந்தேன்.  
‘கையெழுத்துப் பிரதி’ என்ற வார்த்தை என் நினைவுக்கு வந்தது. அப்படியென்றால் MANUSCRIPT. ‘பிரதி’ என்றால் இந்த இடத்தில் ஒவ்வொரு என்ற பொருள் வரவில்லை.
வாதி/ பிரதிவாதி என்று சொல்லும்போது பிரதி என்று வருகிறதே! அதற்குப் பொருள் என்ன? வாதி க்கு எதிர்ப்பதம் பிரதிவாதி. எதிர்வழக்காளர் DEFENDANT.
இந்த ‘பிரதி’ என்ற வார்த்தை என்னை வெகுவாகக் கவர்ந்தது. பேச்சுவழக்கில் அதிகம் பயன்படுத்தப்படாத ஒரு வார்த்தை! ஆனால் நிறைய பொருளில் வருகிறதே! என்று ஆராய்ந்து பார்த்தேன்.
கூகுளில் தேடிப் பார்த்து நான் கண்டுபிடித்த ‘பிரதி’ என்று வரும் வார்த்தைகளை இங்கே பட்டியலிடுகிறேன்.
1. பிரதி – ஒவ்வொரு each
2. கையெழுத்துப் பிரதி - Manuscript
3. பிரதி வாதி – Defendant.

4. பிரதி என்றால் நகல் copy. (புத்தகம், பத்திரிகை, இசைத்தட்டு முதலியவை குறித்து வருகையில்) குறிப்பிட்ட ஒரே உள்ளடக்கத்தைக் கொண்டு ஒரே மாதிரியாக வெளியிடப்படும் பலவற்றுள் ஒன்று;  copy (of a book, music record, etc.).  பார்த்து எழுதுதல் copy செய்தல்

5.  copy (of a photograph, certificate, etc.). இந்தப் புகைப்படத்தில் உங்களுக்கு எத்தனைப் பிரதி வேண்டும்?/ சான்றிதழ்களின் பிரதி அனுப்பினால் போதும்./ நாவலின் தட்டச்சுப் பிரதி என்னிடம் இருக்கிறது.

6. Substitute மாற்று என்ற பொருளிலும் பிரதி என்ற சொல் வருகிறது. பேச்சு வழக்கில் ‘பர்த்தி’ என்று சொல்லக் கேட்டிருப்போம். வைரத்திற்குப் பிரதி புஷ்பராகம். வைரத்திற்குப் பர்த்தி புஷ்பராகம் என்று சொல்வார்கள்.

7. Opposition மாற்று என்றும் பிரதி என்ற சொல் பொருள் தரும். நான் சொல்வதற்கெல்லாம் பிரதி சொல்கிறான்.

8. Competition என்றும் பிரதி என்ற சொல்லிற்குப் பொருள் உண்டு. என் கடைக்குப் பிரதியாக அவன் கடை போட்டுள்ளான்.

9. return (in gratitude for help received); . என்னை விபத்திலிருந்து காப்பாற்றிய அவருக்குப் பிரதி என்ன செய்யப்போகிறேன்.
10. பிரதிபலன் என்றால் Reaction Reward என்பது பொருள். பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்வதுதான் தொண்டு அல்லது சேவை

11. பிரதிபலிக்க என்றால் To be reflected, as images in a mirror, to be cast as a shadow, அவனுடைய எண்ணத்தையும், வாழ்க்கை முறையையும் அவன் செயல் பிரதிபலிக்கிறது.

அனுகூலம் என்றால் சாதகமான என்பது பொருள். அதற்கு எதிர்ப்பதம்
12. பிரதிகூலம். சாதகமற்ற அதாவது disadvantage இந்தத் திட்டம் பொதுமக்களுக்கு பிரதிகூலமாக இருக்கும்.

13. பிரதிதினம் என்றால் நாளுக்கு நாள்.  மடை திறக்கப்பட்டதும் பிரதிதினம் தண்ணீர் வரத்து அதிகமானது.

14. பிரதிநிசம்--பிரதிராத்திரம், Night by night, இரவோடிரவாக [ex நிசம்=நிசி.] 

15. பிரதிசத்தம், பிரதிதொனி, பிரதி நாதம் – எதிரொலி echo, reverberation a sound heard again near its source after being reflected. அருகில் மலை இருப்பதனால் நாம் எழுப்பும் சத்தத்தின் பிரதிசத்தம் (பிரதிதொனி, பிரதி நாதம்) கேட்கிறது.

16. பிரதிதானம், பிரதியுபகாரம்  Remuneration, benefits in return for favors received; return of a deposit, கைம்மாறு. தங்கள் அன்புக்கு பிரதியுபகாரமாக நான் என்ன செய்யப்போகிறேனோ?

17. பிரதிட்டை--பிரதிஷ்டை, Consecration, dedication, by which a god is supposed to be brought into an image, ஆவாகனம்இன்று இக்கோவிலில் வினாயகர் விக்ரஹம் பிரதிட்டை (பிரதிஷ்ட்டை) செய்யப்பட்டது.

18. பிரதிப் பெயர்ச் சொல் என்றால் pronoun

19. பிரதிநிதி - representative
இவை தவிர, இன்னும் சில சொற்களும் தமிழ் அகராதியில் உள்ளன.  

20. பிரதிபதம்,   A synonym  ஒத்த பொருள் தரும் சொல்  Explanation or interpretation, word by word  பதவுரை
21. பிரதிமண்டலம், s. Circumference, சுற் றளவு.
22. பிரதிவாக்கியம்,  Answer, reply, மறுமொழி
23. பிரதிக்கினை – prathingna, confession, அறிக்கையிடுதல்
24. பிரதிவசனம்--பிரதிவாக்கியம்,  Answer, reply, மறுமொழி
25. பிரதிபட்சன்,   An opponent, an antagonist, எதிரி.
26. பிரதிதுரை, A deputy governor, உதவித்தலைவன்
27. பிரதிகர்மம் – மாற்றுச் செய்கை, retaliation
28. பிரதிகாயம் – wounds received in return
29. பிரதிகாரம் – பழி வாங்குகை,, revenge
30. பிரதிசாபம் – A counter curse
31. பிரதிசாயை, பிரதிபலம் - Reflection as from water, a looking glass
32. பிரதிபிம்பம் Reflection of an image as in a mirror

33. பிரதிபாலனம், s. Guard, protection, as பரிபாலனம்
34. பிரதி Response 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக