வெள்ளி, 3 ஜூலை, 2020

கலக்கல் காமெடி



('மத்யமர்' என்ற face book group க்காக)
கலக்கல் காமெடி 1
'கரோனா, கரோனா' என்ற ஒரு வைரஸ் இந்த உலகம் பூராவும் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் 'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க  நாமக்கு நாமே 'memes' என்ன... mask சம்மந்தமான jokes என்ன..... என்று இந்த lockdown நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறோம்.


'carnivores' என்று எழுதியதைக் கூட 'corona virus' என்றே படிக்க முற்படுகிறோம். இந்த நேரத்தில் எங்கள் வீட்டில் நடந்த ஒரு joke 'கலக்கல் காமெடி' யில் 'உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


பெங்களூரில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில்  பணிபுரியும் என் மகள் சௌரபி, work from home அடிப்படையில் தஞ்சாவூருக்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது. வீட்டில் ஒரு room அவளுக்காக set செய்தோம். Plug point உள்ள ஒரு இடத்தில், ஒரு table, chair, போட்டு, working atmosphere create செய்திருந்தோம். அவள் வந்தது முதலே  அந்த plug point இல் loose contact இருப்பதாக சொல்லிக்கொண்டே இருந்தாள்.  

ஒருநாள், அந்த point லிருந்து 'பொர பொர' என்று ஒரு சத்தம் வருவதாக, electrical engineer ஆன தன் தந்தையை அழைத்து காண்பித்தாள்.
Test பண்ணிப்பார்த்த அவர், ‘அது 'CORONA DISCHARGE' என்று சொன்னார். (‘இருங்கள்… இருங்கள்….  தவறோ என்று நினைத்து மீண்டும் போன sentence ஐப் படித்துப் பார்க்கிறீர்களா? வேண்டாம். அவர் சொன்னது corona discharge தான்.)  நானும் அவளும், 'என்னதூ.....' என்றோம்.
அது ஒண்ணுமில்லை… plug point க்குள்ள air போயிருக்கும். அதில் supply வரும்போது இந்த மாதிரி சத்தம் வரும். அதுக்குப் பெயர்தான் corona discharge’ என்று மிகச் சாதாரணமாக விளக்கம் கொடுத்துவிட்டு, 'நீ வேணா corona discharge ன்னு google search பண்ணிப் பார்' என்றார்

'அப்பா... நான் 'corona discharge' ன்னு, search கொடுத்தால் அது பாட்டிற்கு தமிழ் நாட்டிலிருந்து இவ்வளவு பேர் discharge, இந்தியாவிலிருந்து discharge ஆனவர்கள் எண்ணிக்கை என்று சொல்லப்போகிறது' என்று சொல்லிக்கொண்டே search செய்த சௌரபி,
'அப்பா... நீ நன்றாகப் படித்துத்தான் pass செய்திருக்கிறாய்'. அப்படியே Wikipedia வோட first line சொல்லியிருக்கிறாய்’ என்று சொன்னதுடன்,
'அப்ப இத்தனை நாளா நான் corona கூடத்தான் போராடிக்கொண்டிருந்தேனா...' என்றும் சொன்னவுடன் எங்கள் சிரிப்பின் decibel ஐ சொல்ல முடியுமா என்ன?

(Wikipedia on corona discharge:
A corona discharge is an electrical discharge brought on by the ionization of a fluid such as air surrounding a conductor that is electrically charged.
Coronas can generate audible and radio-frequency noise, particularly near electric power transmission lines.)






கலக்கல் காமெடி - 2
என் மகள் சௌரபிக்கு, அவள் சின்ன குழந்தையாய் இருந்தது முதல் செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்க ஆசை. ஆசைப் படுவாளே தவிர அதிகம் பயப்படுவாள். எனக்கோ இயல்பாகவே பிராணிகளைப் பார்த்தால் மிகவும் பயம். அதனால் நாங்கள் அவளின் இந்த ஆசையை encourage செய்யவில்லை. ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டிருந்தோம்.
இப்படியே நாள் ஓடிக்கொண்டிருந்தது. அவள் கொஞ்ச நாளில் இந்த விஷயத்தை மறந்துவிடுவாள் என்று  நினைத்து, நாங்களும் அப்படியே விட்டுவிட்டோம். அவள் 2nd std. க்கு வந்துவிட்டாள். schoolக்கு daily auto வில் போய் வருவாள். ஒரு நாள் school லிருந்து திரும்பியதும், 'அப்பா... அப்பா.... அப்பா எங்கே? அப்பா எங்கே?' என்று அரக்கப்பறக்க உள்ளே ஓடிவந்தாள். 'ஏன்...? ஏன்..? என்ன ஆயிற்று?' என்று நான் அவள் பின்னாலேயே ஓடினேன்.
'இல்லமா.... நான் வரும் வழியில் ஒரு கடையை பார்த்தேன். கடை மூடியிருந்தது. ஆனால், கிருஷ்ணா பெட்ஸ்என்ற board இருந்தது. அங்கே. எனக்கு ஏதாவது பெட் வாங்கலாம்மா' என்றாளே பார்க்கலாம்....
சரிதான்.....அவளின் இளம்பிராயத்து ஆசை இன்னும் மறையவில்லை போலிருக்கிறதே! என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும்போதே இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டே வந்த என் கணவர் 'என்னடா..? என்றார்.
‘அப்பா அப்பா… நான் school லேர்ந்து வரும் வழியில் பெட்ஸ் கடை ஒண்ணு புதுசா வந்திருக்குப்பா. நாம் போய் பார்ப்போம்பா'
‘பூட்டியிருந்ததுன்னு சொன்னியே! நாளைக்குக் கார்த்தால 10 மணிக்குக் கடை திறக்கலாம். போய்ப் பார்ப்போம்’ என்று உடனே ஒப்புதல் அளித்துவிட்டார் அவள் அப்பா.
‘அட நாராயணா….பெட்ஸ்லாம் எனக்கு பயமாச்சே!’ என்று நான் திகைக்க,
சௌரபியோ அப்பா மறுப்பு ஏதும் சொல்லாததால், thank you appaa thank you appa என்று குஷியாக சொல்கிறாள்.
அவளின் நினைவு முழுவதும் பெட்ஸ் வந்து ஆக்ரமித்துக்கொண்டது. ‘அம்மா… அந்த கடையில் என்னென்னெல்லாம் கிடைக்கும்?’ நாம் நாய் குட்டி வாங்கலாம்மா’ என்றெல்லாம் கூறிக்கொண்டேயிருந்தாள். ‘நான்தான் அதுக்கு குளிப்பாட்டிவிடுவேன். நான்தான் அதுக்கு சாப்பாடு கொடுப்பேன்’ இவ்வாறாக கனவும், கற்பனையுமாக அன்று இரவு கழிந்தது.
அடுத்த நாள் சீக்கிரமே எழுந்து கிளம்பிவிட்டாள். ஒரே பெட்ஸ் ஸ்மரணைதான்.
பத்தரை மணிவாக்கில் கடை திறந்திருக்கலாம் என்று அவள் அப்பாவுடன் போனவள், போன வேகத்தில் அழுதுகொண்டே திரும்பி வந்தாள்.
‘கிருஷ்ணா பெட்ஸ் ’ னு தமிழ்ல எழுதியிருந்த board ஐப் பார்த்துவிட்டு……ம்ஹூம்…..ம்ஹூம்…..’என்று அழுதவளைப் பார்த்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
(நன்றாக கவனியுங்கள் தமிழில் எழுதியிருந்த board)
‘அழாம சொல்லு தங்கம்…’ என்று நான் கேட்க,
'அம்மா... அது pets கடை இல்லை மா…   மெத்தை கடைமா... 'பெட்ஸ் ' னு board ஐப் பார்த்துவிட்டு pets னு.......' அவளால் sentence ஐ முடிக்கவே முடியவில்லை.
‘ஓஹோ… beds கடையா அது….அப்பாடா.. நான் தப்பித்தேன். ‘கடவுள் இருக்கான் குமாரு’

இது நடந்து 15 வருடங்கள் ஆகிறது. இன்றுவரை இந்த விஷயத்தைப் பற்றி பேசினாலே எங்களுக்கு சிரிப்புதான் வரும். அவளோ… English லயும் போட்டிருக்கமாட்டான்……ஒரு படமாவது போட்டிருக்கக்கூடாது….என்னை இப்படி ஏமாத்திட்டானே….!.’ என்றபடி சிரிப்பாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக