திங்கள், 13 ஜூலை, 2020

கட்டாயப் படிப்பு 1


கட்டாய்ப்படுத்தி பிள்ளைகளைப் படிக்கவைப்பது குறித்து நேற்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இது ஒரு challenging question தான்.
இந்தக் கால குழந்தைகளுக்கு தாம் என்னவாகவேண்டும், என்ன படிக்கவேண்டும் என்ற தெளிவு இருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், அத்தகைய தெளிவு இல்லாத நிலையும் இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.
journalism படித்து journalist ஆக வேண்டும் என்று சொன்னாள் ஒரு பெண். ஆனால் அவளுடன் பழகி, பேச்சுக்கொடுத்துப் பார்த்த பின் தான் அவள் உண்மையில் விரும்பியது style ஆக mike பிடிப்பதைத்தான் என்பது தெரிந்தது.
சிலர் அழகழகாக புடவை கட்டிக்கொள்ளலாம் என்று teacher ஆக விருப்பம் என்று கூறியிருக்கிறார்கள்.
அதேபோல் ஒரு பெண் மிக சிறப்பாக நடனம் ஆடுவாள். நன்றாகவும் படிப்பாள். அவளை நடனத்துறையில் மட்டுமே ஈடுபடுத்த முடியவில்லை. educational qualification க்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
BDS படித்தான் ஒரு பையன். அவனாக விரும்பித்தான் படித்தான். அவனுடைய பெற்றோர் college professors. நல்ல படித்த குடும்பம்.
படிக்கும் போதே அவனுக்கு அந்த course பிடிக்காமல் போனது. course complete செய்துவிட்டான். அவனுடைய பெற்றோரும் clinic வைத்துக் கொடுத்தனர். கொஞ்ச நாள் practice செய்தவன், தனக்கு இந்தத் தொழில் பிடிக்கவேயில்லை என்று சொல்லிவிட்டான். வசதியான பெற்றோரானதால் அவன் வாழ்வாதாரத்திற்கு ஏதோ வழி செய்தனர்.
இப்படியும் சில பிள்ளைகள் இருக்கிறார்கள். 'அவனுக்கு or அவளுக்கு என்ன பிடிக்கிறதோ அதை தேர்ந்தெடுங்கள்' என்று ஒரே statement ஆக இக் கேள்விக்கு பதில் சொல்லவே முடியாது. லட்சியம், ஆசை, கனவு என்றெல்லாம் இருக்கலாம். அதற்கு பொருளாதார சூழ்நிலை இடம் கொடுக்க வேண்டும். பெற்றோரின் உடல் நிலை, வயது இடம் கொடுக்கவேண்டும்.
குழந்தைகளை விட பெற்றோருக்கு' அனுபவம்' என்ற ஒன்றும் இருக்கிறது. குழந்தைகளுக்கும். தொழில் நுட்ப அறிவு, உலக அறிவு போன்றவை இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. அதனால் பெற்றோருடன், சேர்ந்து கலந்து ஆலோசித்து எதிர்காலத்தை தொலை நோக்கி, ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
இதில் பல வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன. 'நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் என்று இல்லை' என்பது போல், ஆசை என்பது வேறு நிதர்சனம் என்பது வேறு என்பது என் கருத்து.



Chandrasekaran Jayaraman and 16 others

14 Comments


Like

Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக