வெள்ளி, 3 ஜூலை, 2020

SURPRISE VISIT Part 2

surprsie visit - part 2.
அப்பா அடித்த calling bell கேட்டு, வாசலுக்கு வந்த நான், 'வாங்கோப்பா' என்றபடி நெஞ்சம் படபடக்க... படபடப்பை மறைத்தபடி நிற்கிறேன். நான் தான் surprise maintain பண்ணியாகணுமே!
டடைங்ங்..... காரின் இந்த பக்கத்திலிருந்து மாதங்கியும், அந்த பக்கத்திலிருந்து சந்தியா வும் இறங்க...... 'மா.....தங்கீ.........' என்று நான் சந்தோஷக் குரலில் கத்த... அவளோ.... ஹ...ஹ... ஹ... என்று கடகடவென்று சிரிக்க.. ஒரு நிமிஷம் ஒருத்தருக்கும் ஒன்றுமே புரியவில்லை. ஓடி வந்து அவள் என்னைக் கட்டிக்கொள்ள (10 வருஷம் முன்னாடி சார்....கொரோனா லாம் இல்லாத காலம்) 'என்னடீ... எங்கடீ வந்த....' என்று நான் அவளை அணைக்க....
'என்ன மாதங்கி உன் surprise திருவிளையாடல் முடிஞ்சுதா?" என்றபடி என் கணவர் வந்தார்.
'இல்ல அத்திம்பேர்.... இப்போதான் ஆரம்பம்...." என்று சிரித்தாள்.
சௌமித்ரி, சௌரபியும் சந்தியா அனன்யா வை கட்டிக்கொண்டு குதிக்க... வாசல்ல எத்தனை பேர் இதைப் பார்த்தாளோ தெரியல...
அப்பாதான் 'வா எல்லாரும் உள்ள போய் பேசலாம்' என்றார்.
அம்மாவை நான் 'வா'ன்னு கூட கூப்பிடலை. அம்மா இந்த காட்சிகளை எல்லாம் பார்த்து ரசிச்சுண்டே உள்ள வந்தா.
ஜெயராமனும்தான். அவரோட wife பண்ணின சாகசத்தை அவரும் மெய்மறந்து சிரிச்சு ரசித்தார்.
'அப்பா... என்னப்பா.. நீங்க ஒண்ணுமே சொல்லல...'
'நான் என்ன பண்றது.... இவ சொல்லக்கூடாதுன்னு ஒரே condition' ன்னா அப்பா.
ஜெயராமன் சொன்னார், 'மாதங்கி கூட ,' நாம் வழில எங்காவது சாப்பிட்டு போயிடலாம். ஒண்ணுமே சொல்லாம போலாம் ன்னு. நான்தான், 'நீ surprise பண்ணு பண்ணாம இரு. நாம் lunch க்கு லக்ஷ்மி ஆத்துக்குத்தான் போறோம்னு சொன்னதுனாலதான் அந்த phone ஏ வந்தது'
'நல்ல காரியம் பண்ணினேள் ஜெயராமன். ஆனா யாரோ 4,5, பேரோட வரேன்னு மட்டும் சொல்லிட்டு, phone ஐயும் வச்சுட்டா அப்பா. எனக்கு ஒண்ணுமே புரியல. யார் அந்த 4,5, பேர் ன்னு.'
'சரி.. சமைச்சிருக்கியோன்னோ'
'அது இல்லப்பா... உங்க friend group ஆ என்னன்னு புரியல....' என்றதும்
'லக்ஷ்மி... உங்க அப்பாவோட friend group தான் வந்திருக்கோம்'ங்கறார் ஜெயராமன். ஒரே வெடிச்சிரிப்பு. அந்த friend அவரோட relative ங்கறது எனக்கு மறந்து போச்சு.
இதற்குள் நாங்க போட்ட சத்ததில் என் மாமியார் மாமனார் முழித்துக்கொண்டு ஹாலுக்கு வந்தனர். 'அடேடே... வாங்கோ.. வாங்கோ ன்னுட்டு மாதங்கியா வந்திருக்கிறது? அதான் ஒரே கலகல ன்னு சிரிப்பு சத்தம்' என்றார்கள்.
'hello மாமி.. 'என்றபடி மைசூர்பா வை கையில் கொடுத்து, 'நான் பண்ணினது மாமி' என்றாள். பின் ஒரு phone பண்ணிக்கறேன்னா.
இவர் என்னிடம் வந்து, என்ன சமைச்சிருக்க.... ஏதாவது வாங்கிண்டு வரட்டுமா?' என்றார். நான் மெனுவை சொன்னதும், 'ஓ.. வடை, பாயசமெல்லாம் கூடready பண்ணிட்டியா?' என்றார். 'ஆமாம்... சௌமித்ரி இன்னிக்கு ஊருக்குப் போறாளேன்னு வடையும், fried rice ம், அம்மா நேத்திக்கு sweet ஏதாவது இருக்கா'ன்னா... 4,5 guest வர்றதா அப்பாகிட்டேயிருந்து phone... எல்லாத்தையும் combine பண்ணி சமைச்சுட்டேன்' என்றேன் பெருமையாக... surprise maintain பண்ணணுமே!!!!
'அதான் வாசனை அடிச்சுது' என்றார்.
'என்ன அத்திம்பேர்... எப்பிடி வந்துட்டேன் பாத்தேளா....' என்றபடி வந்தாள் மாதங்கி.
'ம்.. ஆமா... pleasant surprise' ன்னார் இவர்.
'என்னடீ சமச்சிருக்க... 'என்றவள்..'super super...'என்றாள்.
நானும் முதலிலிருந்து என் பல்லவியை ஆரம்பித்தேன். 'யார் வரப்போறா என்னன்னே தெரியாமல். ladies ஆ gents ஆ.. குழந்தைகளா... வெங்காயம் சேக்கலாமா வேண்டாமான்னு புரியாமல் நிதானமா ஒரு menu போட்டேன்'
அவளோ தனக்குக் கிடைத்த அபார வெற்றியால் புளகாங்கிதம் அடைந்தாள்.
'நீ இன்னும் ஒரு கப் சாதம் மட்டும் வச்சுடு. கலத்துக்குப் பருப்பு வைச்சிருக்க போல இருக்கே! மீதியெல்லாம் போறும். என்றாள்.
'சரி' யென்று சாதம் வைத்தேன். எனக்கு என்னவோ போறும் போலதான் தோணித்து. பாத்துக்கலாம்.
'சரி.. சாப்பிட்டுட்டு பேசலாமா' என்று என் கணவர் குரல் கொடுத்தார்.
''ஒரு 5 நிமிஷம் அத்திம்பேர்.. இந்த மைசூர் பா சாப்பிட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லுங்கோ நான் பண்ணினது' என்றாள்.
'அதானே பயமாயிருக்கு' என்றார் இவர். ஒரே குபீர் சிரிப்பு.
வாசலில் calling bell அடித்தது. இவர் போய்ப் பார்த்தார். 'welcome welcome... லக்ஷ்மி... யார் வந்திருக்கான்னு பாரு' என்றார்.
'யாராயிருக்கும்?' என்று புருவம் உயர, 'திபு திபு வென்று ஓடி போய் பாக்கறேன்.
'ஹா...... தரங்கிணி family....என் இன்னொரு தங்கை. மீண்டும் அதே கத்தல்... கூச்சல்... '
'வா..வா..தரங்கிணி.....வாங்கோ.. வாங்கோ..முத்துகுமார்' என்று தேன் குடித்த நரியாட்டம் வார்த்தை தடுமாற உளறுகிறேன்.
ஒரே சிரிப்பலைதான் எங்கு பார்த்தாலும். அவளுக்கு 2 சின்ன குழந்தகள். மானசா, மனீஷ். முத்துக்குமார் அவ husband. அவா திருச்சில இருக்கா.
cousins 6 பேருக்கும் தலை கால் புரியலை.
யார் பேசறதும் யாருக்கும் காதில் விழலை. யார் சொல்றதும் புரியலை. ஆனா எல்லாரும் என்னென்னவோ பேசிண்டேயிருக்கோம். சிரிச்சுண்டேயிருக்கோம்.
மாதங்கி என்ன பண்ணியிருக்கா... எனக்கு அப்பா phone பண்ணினதுக்கு அப்புறம் அவளுக்கு தோணியிருக்கு, தரங்கிணியையும் வரச்சொல்லலாமே!ன்னு. சரின்னு phone பண்ணிப்பாத்திருக்கா. அப்போ முத்துக்குமார் வெளியில் போயிருந்தாராம். consult பண்ணிட்டு சொல்றேன்னு தரங்கிணி சொல்லிட்டு phone ஐ வச்சிருக்கா. அதுக்குள்ள இவா கிளம்பிட்டாளாம். அதனால தரங்கிணியோட confirmed program இவளுக்கே தெரியாதாம். அதனாலதான் வந்தவுடன் phone பண்ணிப்பாத்தாளாம். ring போய் cut ஆயிடுத்தாம். அதனாலதான் (landline landline!!!!!) கிளம்பிட்டா போல இருக்குன்னு இன்னும் கொஞ்சம் சாதம் மட்டும் வைக்க சொன்னாளாம். 'குழந்தைகளுக்காக பருப்பு இருக்கான்னு பாத்தேன்' அப்படீங்கறா.
அம்மா....டியோவ்!
இவ கிட்ட நம்ப ஜம்பா பலிக்காதுப்பா. surprise surprise தான். ஆனா sweet and pleasant surprise.
'மாதங்கி, தரங்கிணியோட surprise திருவிளையாடல் ஆரம்பமா, முடிவா' ன்னு இவர் கேட்க....
'to be continued அத்திம்பேர்' என்று தரங்கிணி சொல்ல ஒரே சிரிப்பு மழைதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக