வெள்ளி, 3 ஜூலை, 2020

SURPRISE VISIT Part 1

surprise பண்றதுன்னா என் தங்கைக்கு அல்வா சாப்பிடற மாதிரி. suspense ஐ maintain பண்ணி ஒரு thrill create பண்ணிடுவா. suspense reveal ஆகும்போது ஒரே கூச்சலும், கத்தலுமா அந்த இடமே கலகலப்பா ஆயிடும்.
இப்போ நான் சொல்லப்போற விஷயம் சுமார் 10 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது.
அவளுக்கு ரெண்டு குழந்தைகள். பங்களூர்ல இருக்கா. ஒரு தடவை குடும்பத்தோடு எங்க பிறந்த ஊரான கரூர் மாவட்டத்துல இருக்கற மகாதானபுரத்துக்குப் போனா. அவளுக்கு எனக்கு surprise குடுக்கணும்னு ஆசை வந்துடுத்து. நாங்க இருக்கறது தஞ்சாவூர்ல. எங்க அப்பாகிட்ட அத சொல்லியிருக்கா. 'ம்... போலாமே! ஆனா இப்போ கிளம்பினா lunch time க்கு தஞ்சாவூர் போயிடலாம். லக்ஷ்மிக்கு phone பண்றேன்' அப்பா சொல்லியிருக்கா.
'இல்லப்பா,, நாம surprise ஆ போலாம்'னு சொன்னாளாம். அப்பா, அம்மா, தங்கை, அவள் கணவர், 2 குழந்தைகள், driver என்று 7 பேர் இருந்ததுனால அப்பா phone பண்ணிட்டு போலாம்னு சொல்லியிருக்கா. இவளுக்கோ surprise ஆ வரணும்னு தான் ஆசை. 'போய் பாத்துக்கலாம் பா. 'நானும் அவளுமா சீக்கிரம் சமைச்சுடறோம். அவ எப்பிடி சமாளிக்கறான்னு பாக்கலாம்' அப்படி இப்பிடின்னு அப்பா கிட்ட சொன்னாலும், அப்பாவுக்கு மனசு கேக்கவேயில்லை. 'சரி. ஒரு 5,6 பேருக்கு சமச்சு வைன்னு மட்டும் சொல்றேன். யார் யார் வரோம்னு சொல்லல' ன்னு அப்பாவும் அவளோட மல்லுக்கு நிக்கமுடியாம சொன்னாளாம். இவளும் அரை மனசா ஒத்துண்டாளாம்.
ஒரு வழியா அப்பாவோட அவளும் ஒத்துப்போயி,'சரிப்பா.. வேற எதுவும் சொல்லக்கூடாது'ன்னு கண்டிஷன் போட்டாளாம்.
இதெல்லாம் இங்க வந்தப்புறம் அவா சொன்னது.
இந்த களேபரம் எல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது. நான் மாமனார், மாமியார், கணவர், ரெண்டு குழந்தைகள் என்று எங்காத்துக்கு மட்டும் சமையலுக்கு ready பண்ணிண்டிருக்கேன்.
அப்போ எல்லாம் landline phone தான். 'ட்ரிங்க், ட்ரிங்க்' ன்னு telephone அடிக்கறது. நான் கைவேலைய அப்படியே விட்டுட்டு, phone எடுத்து 'hello' சொல்றேன். அப்பா தான்.
'குட்டி... ஒரு 4,5 பேரோட வரேன் டா. சமைச்சு வச்சுடு' ன்னு சொல்லிட்டு phone ஐ வச்சுட்டா.
எனக்கு ஒண்ணுமே புரியல. 'என்ன ஒண்ணுமே clear ஆ சொல்லாம வச்சிட்டாளே!' ன்னு ஒரே குழப்பமாயிருக்கு.
Delta farmer's association people ஓட வந்தா அதுக்குத் தகுந்த மாதிரி பண்ணணும். அப்பாவோட ஒரு friend. அவர் வெங்காயம் சாப்பிட மாட்டார். இலைல தான் சாப்பிடுவார். வெள்ளி அல்லது பித்தளை டம்பளர் லதான் தூத்தம் கூட குடிப்பார். அந்த மாமியும் அப்படித்தான். அவாளோட வந்தா அதுக்குத் தகுந்த மாதிரி ready பண்ணணும். எனக்கு ஒண்ணுமே புரியல. 'அப்பாகிட்டயே கேட்டுடுவோம்'னு phone பண்ணினேன். நாந்தான் முன்னாடியே சொன்னேனே landline phone தான் அப்பெல்லாம்.
எங்க ஆத்துல அப்பா சித்தப்பா எல்லாரும் joint family யா இருந்தா. என் phone ஐ சித்தி தான் எடுத்தா. சௌக்கியமெல்லாம் விஜாரித்தப்புறம்,
'சித்தி அப்பா இருக்காளா'ன்னேன்.
'அவா எல்லாரும் கிளம்பிட்டாளே'
'யாரெல்லாம் சித்தி?'
'உனக்குத் தெரியாதா மாதங்கி வந்திருக்காளே!'ன்னுட்டா சித்தி.
'மாதங்கியா....' ன்னு நான் கேக்க
'அச்சச்சோ... உனக்குத் தெரியாதா?' surprise ஆ வராளா... எனக்குத் தெரியாம சொல்லிட்டேனே... நீ நான் சொல்லிட்டேன் ன்னு சொல்லாம இருக்கியா' ன்னு சித்தி பாட்டுக்கு பேசிண்டே இருக்கா.
எனக்கு மனசு ரெக்கை கட்டி பறக்காத குறைதான். 'don't worry chithi. நான் எப்படி surprise பண்றேன் பாருங்கோ' ன்னு சொல்லிட்டு phone ஐ வச்சிட்டேன்.
புரிஞ்சு போச்சு. அப்பா கிளம்பியாச்சு. அம்மாவை அப்பா விட்டுட்டு வரவே மாட்டா. driver, மாதங்கி, ஜெயராமன், சந்தியா, அனன்யா. 5 adults 2 குழந்தைகள். அவா ரெண்டு பேரும் 7th and 1st std.
இப்போதானே கிளம்பியிருக்கா. திருச்சி வந்து தஞ்சாவூர் வர 3 மணி நேரமாயிடும்.
முதல்ல வடைக்கு நனைத்தேன். பருப்பைப் போட்டு சாம்பார், கூட்டு, அதோடு சேமியா பாயசம். பால் வாங்கி வந்து தான். குழந்தைகளுக்காக ஒரு fried rice, potato fry, ரசம், அப்பளம், இப்படியாக சமையலை முடித்தேன். தயிர் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன். மத்யானத்துக்கு டிகாக்ஷன் போட்டு வச்சேன். அவ 'green tea' தான் குடிப்பா. உடனே வண்டி எடுத்துண்டு போய் green tea, ice cream, எல்லாருக்கும் gifts ன்னு வாங்கிண்டு வந்தேன்.
அன்னிக்கு sunday தான். இவருக்கு office leave. என் பெரிய பெண் Guindy Anna University ல 2nd year படிச்சிண்டிருந்தா. அவளும் leave க்கு வந்திருந்தா. சின்ன பெண் 8th. நான் surprise ஐ maintain பண்ண ஆரம்பிச்சேன்.
மாமியார் மாமனாருக்கு சாப்பாடு போட்டுவிட்டேன். அவா படுத்துக்கப் போயாச்சு.
இவரும் குழந்தைகளும் 'சாப்பிடலாமா' என்ற போது ஏதேதோ சால்ஜாப்பு சொல்லி நேரம் கடத்திண்டே இருந்தேன். வாசல்ல போய் நின்னு எட்டி எட்டி பாக்கறேன்.
கார் எங்க தெரு நுழையறது தெரிஞ்சதும் உள்ள ஓடி வந்திட்டேன்.
கார் வந்து ஆத்து வாசல்ல நிக்கறது. driver horn குடுக்கறார். அப்பா அதுக்குள்ள கார்லேர்ந்து இறங்கி calling bell double bell குடுக்கறா.
நாங்க நாலு பேரும் வாசலுக்கு ஓடறோம். நான் தெரிஞ்சு போறேன். இவா மூணு பேரும், 'யாரு.. என்ன..' ன்னு வரா.
(மீதிய அடுத்த post ல போடறேன். ரொம்ப lengthy யா இருக்கு.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக