திங்கள், 13 ஜூலை, 2020

கட்டாயப் படிப்பு 2

கட்டாயப்படுத்தி படிக்கவைத்தல் நன்மை, தீமை பற்றிய விவாதத்தில் நேற்று ஒரு பதிவை இட்டிருந்தேன். இன்று வேறு கோணத்தில் அதே தலைப்பில் ஒரு பதிவு.
கனவுகளுடனும், லட்சியத்துடனும் சில பிள்ளைகள் இருப்பார்கள். குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்கும் பெற்றோர் அதற்கு குறுக்கே நிற்பார்கள். அவர்கள் எண்ணமே வேறு மாதிரி இருக்கும். இது போன்ற பெற்றோர்களுக்கு counselling கொடுக்க வேண்டும்.
இப்போதெல்லாம் மாணவர்களுக்கு படிப்பதற்கு என்று பல options இருக்கிறது. அது ஒரு விதத்தில் positive ஆக இருந்தாலும் அதுவே drawback ஆக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. இவர்களுக்கும் பல துறைகளில் interest இருப்பதால் சரியான பாதையை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருக்கிறது.
படித்து, வேலைக்கு அமர்ந்து சம்பாதித்தல் என்பது ஒன்று. நமக்குப் பிடித்த படிப்பு படித்து வேலை செய்தல் என்பது மற்றொன்று. வாழ்க்கை வாழ்க்கை என்று ஒன்று இதற்கு இடையே இருக்கிறது. சாதித்தல் என்ற பெயரில் வாழ்க்கையை கழித்துவிடுபவர்களும் இருக்கிறார்கள். வாழ்வது என்ற ஒன்றிற்காக தன் கனவுகளையும், திறமைகளையும், தொலைத்துவிடுபவர்களும் இருக்கிறார்கள்.
பலவற்றை சிந்தித்து ஒரு முடிவு எடுப்பதே சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக