வெள்ளி, 3 ஜூலை, 2020

எழுத்தாஞ்சலி (Dr.S.சந்திரசேகரன்)

எழுத்தாஞ்சலி
வணக்கம்.
என் பெயர் லக்ஷ்மி ரவி. ‘மத்யமரி’ல் 2 பதிவுகளை பதிந்ததுடன், தனித்திறமைப் பிரிவிலும் பங்கேற்றுள்ளேன். என் அப்பாவின் அரிய வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து ‘மகாதானபுரம் ராஜாராமன் (என் அப்பா) என்ற தலைப்பில் புத்தகம் எழுதி 2018ம் ஆண்டு அப்பாவின் சதாபிஷேகத்தின் போது வெளியிட்டேன். அதே போல் என் மாமனார் மறைந்த Dr.S.சந்திரசேகரன் அவர்களுக்கும் ஒரு எழுத்தாஞ்சலி கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது.
இந்தக் குழுவிலுள்ள பலரது படைப்புகளையும் படிக்கும் போது ஒரு விஷயம் புரிந்தது. ‘இந்த மேடை எனது அந்த ஆசைக்கு ஏற்றது’. ஏன் தெரியுமா? இந்த குழுவில் கும்பகோணத்தை சொந்த ஊராகக் கொண்ட பலர் இருக்கிறார்கள். எனக்கு Dr.S.சந்திரசேகரன் அவர்களை 1990 ம் ஆண்டு எனது திருமணத்திற்குப் பிறகுதான் தெரியும். ஆனால் ஒரு டாக்டராக அவரை அறிந்தவர்கள் இக் குழுவில் நிறைய பேர் இருக்கலாம் என்பது என் யூகம். அதனால் என் மரியாதைக்கும், அன்புக்கும் உரிய என் மாமனாரின் தொழில் பக்தியையும், நேர்த்தியையும் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள என் எழுத்தாஞ்சலியை இக் களத்தில் சமர்ப்பிக்கிறேன்.
கும்பகோணத்தில் 6, நாராயண ராவ் அக்ரஹாரத்தில் வீட்டு வாசலில் clinic அமைத்து medical practice செய்து கொண்டிருந்தார் Dr.சந்திரசேகரன். ஏரகரம் கிராமத்தைச் சேர்ந்தவரான அவர், COLLEGE OF INTEGRATED MEDICINE, CHENNAI யில் LIM (LICENTIATE OF INDIAN MEDICINE) பயின்றவர். சோழபுரம் மற்றும் பட்டீஸ்வரம் Govt. Hospital லில் பணியாற்றியிருக்கிறார். தனது அப்பா மேல் மிகுந்த மரியாதை கொண்டிருந்த அவர் வீட்டு நிலங்களைப் பராமரிப்பதற்காகவும், இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனின் படிப்பு, திருமணம் போன்றவற்றையும் குறித்த அப்பாவின் விருப்பத்திற்காக, அந்தப் பணிகளை resign செய்துவிட்டு, கும்பகோணத்திலேயே private practitioner ஆக பணிபுரிந்திருக்கிறார். அதே போல் வீட்டின் மூத்தபிள்ளையாக தங்கைகளுக்கும், தம்பிக்கும் பலவிதங்களில் உறுதுணையாக இருந்திருக்கிறார்.
அவருக்கு 2 பெண்கள் மற்றும் 1 பையன். எனக்குக் கல்யாணம் ஆகும்போது 2 பெண்களுக்கும் மணமாகி 2 பேத்திகள் மற்றும் ஒரு பேரன் இருந்தான். என் கணவர்தான் அவருடைய ஒரே பையன். அப்போது Dr க்கு 63 வயது. 1987ம் ஆண்டு ஷஷ்டியப்தபூர்த்தியை இரண்டு மாப்பிள்ளைகளும், மகள்களுடனும், மகனுடனும் சேர்ந்து வெகு சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள்.
எனக்கு மணமான புதிதில் patient வந்தவண்ணம் இருப்பார்கள். இப்போது தாம் குறைத்துக்கொண்டு விட்டதாகவும் முன்பெல்லாம் இன்னமும் நிறைய கூட்டம் இருக்கும் என்றும் அவர் கூறுவார். ஆனால் fees என்று எந்த ஒரு amount ஐயும் அவர் fixed ஆக வைத்துக்கொள்ளவேயில்லை. அவரவர்கள் கையில் இருப்பதை tableல் வைத்துவிட்டுப் போவார்கள். யாரிடமும் demand செய்ததேயில்லை. இப்போதெல்லாம் 5 ரூபாய் டாக்டர், 10 ரூபாய் டாக்டர் என்ற செய்திகள் வருகிறதே அதைப் படிக்கும்போதெல்லாம் எனக்கு என் மாமனார் ஞாபகம் வராமல் இருக்காது.
Actually, எனக்குத் திருமணம் செய்வதற்காக என் அப்பா மணமகன் பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த வரன் வந்தது. கும்பகோணத்தில் இருக்கும் என் பெரியம்மாவிடம் விசாரித்தபோது ‘பணத்தைப் பொருட்டாக நினைக்காமல் மருத்துவ சேவை செய்யும் டாக்டர்’ என்று மிகவும் சிலாகித்து சொன்னார். மேலும் பெரியம்மா சொன்னார், அவா ஆத்து family doctor இவர்தானாம். அதுமட்டுமில்லையாம் பெரியம்மாவுக்கு கல்யாணம் ஆனபோது அவா மாமியார், மாமனார் இருவரும் உடம்பு முடியாதவர்களாக இருந்தார்களாம். ‘Dr ட்டதான் ஓஓ..டுவேன். கையில் பணமே இருக்காது. அவர் ஆறுதலா பேசுவார். ஆத்துக்கு வந்து பார்த்து வைத்தியம் பண்ணுவார். அப்படித்தான் நான் ரெண்டு பேரையும் பாத்துண்டேன். என்கிட்டன்னு இல்ல.. யார்கிட்டையும் dr. fees ஏ எதிர்பார்க்கமாட்டார். இந்த காலத்துல இப்படி ஒருத்தர் இருக்கறது ரொம்ப ஆச்சர்யம். நல்ல சம்மந்தம் விட்டுடவேண்டாம்.’ அந்த வார்த்தைதான் இக்குடும்பத்தின் மேல் ஒரு நல்ல அபிப்ராயத்தை என் பெற்றோருக்கு ஏற்படுத்தியது. பெரியம்மா தன் மாமியார், மாமனாரைக் கவனித்துக்கொண்ட விதமே என் மேல் ஒருவித அபிப்ராயத்தைக் கொடுத்ததாக அப்பாவும் அப்புறம் என்னிடம் கூறியிருக்கிறார் என்பது வேறு விஷயம்.
1990 ல் கும்பகோணத்தில் நிறைய doctors, clinics, specialists, pediatrician என்று வந்துவிட்டனர். அப்போது கூட இந்த Competitive world ல அவர் வாங்கிய அதிகபட்ச fees rs.10. தான். 2ரூபாய், 5ரூபாய் வைத்துவிட்டுப் போனவர்களும் உண்டு. அப்பா practice பண்ண ஆரம்பித்த காலக்கட்டத்தில் கும்பகோணத்தைச் சுற்றி டாக்டர்களே அதிகம் இல்லை. சுற்றுவட்டார கிராம மக்களுக்கெல்லாம் ஆபத்பாந்தவனாக, அனாதரக்ஷகனாக இருந்திருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தியான, busy யான டாக்டர் என்றால் Dr.S.சந்திரசேகரன் தான். அப்போதெல்லாம் doctor visit என்று உண்டு. பாதி ராத்திரி கூட யாருக்காவது உடம்பு சரியில்லை என்று கூப்பிட்டால் வீட்டிற்கு visit செய்து வைத்தியம் பார்ப்பார். Family history தெரிந்து அதன்படி treatment செய்வார். இந்த patient க்கு இன்ன மருந்து அலர்ஜி, இந்த patient க்கு fever வந்தால் உடல் சூடு symptom இருக்காது. என்பதற்கெல்லாம் ஏற்றாற்போல் treatment செய்வாராம். நிறைய மருந்துகள் எழுதித் தரவேமாட்டாராம். பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அவர் private practice பண்ண ஆரம்பித்தபோது வீட்டிலேயே mixer (நமக்கெல்லாம் இந்த mixer பற்றி தெரிய வாய்ப்பே இல்லை. Preparation of medicine using chemicals) தையார் செய்து கொடுப்பாராம். பாலன், ராகவன் என்று இரண்டு compounder கள் வைத்திருந்தாராம். என் மாமியாரும் mixer preparation ல் உதவியிருக்கிறாராம். இப்போது உள்ளது போல் disposable syringe அப்போது கிடையாது. Syringe sterilization செய்வதில் உறுதியாக இருப்பாராம் டாக்டர். அம்மாதான் தினமும் காலை காப்பி போடுகிறார்களோ இல்லையோ syringe ஐ sterilize செய்வார்களாம்.
‘LAMBERETTA SCOOTER’ வாங்கினாராம். அதுவும் என்ன? தஞ்சாவூர் District லேயே முதல்ல Scooter வைத்திருந்தவர் அப்பாதானாம். அப்படியே ‘கெத்தா’ வருவாராம் டாக்டர். அப்புறம் ‘Moris Minor car’ வாங்கி style ஆ self driving செய்வாராம். இதையெல்லாம் அந்தக் காலத்தில் ஊரே வியந்து பார்த்திருக்கு. அதைவிட ‘LAND MASTER CAR’ வாங்கிய போது ‘டேய் ஜெமினி போறார் டா’ என்று இளைஞர்கள் கத்துவார்களாம். ஏன்னா, ஜெமினி கணேஷும் ‘LAND MASTER CAR’ தான் வைத்திருந்தாராம்.
T.S.R. and co., உரிமையாளர் குமார், Raja Talkies சத்திய நாராயண செட்டியார், Automobile spare parts shop owner கிருஷ்ணமூர்த்தி, K.V..R. Jewelers ரமணன், பிரகாஷ் இப்படி கும்பகோணத்து பெரும் புள்ளிகள் பலரும் அப்பாவின் clients ஆக இருந்தார்கள். Clients என்பதை விட நண்பர்களாக இருந்திருக்கின்றனர் என்றுதான் சொல்லவேண்டும். இன்னமும் அவர்களும், அவர்கள் குடும்பத்தாரும் அதே அபிமானத்துடன் எங்களுடன் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நாங்கள் 2006 december மாதம் அப்பா அம்மாவுக்கு சதாபிஷேகம் செய்தபோது வந்த கூட்டத்தைப் பார்க்கவேண்டுமே! அத்தனை clientsம் அந்நியோன்யமாக வந்ததுடன் ‘எங்கள் டாக்டர் எங்கள் டாக்டர்’ என்று பேசியது புல்லரிக்கச்செய்தது என்றால் மிகையில்லை. அத்தனை பேரிடமும் ஆத்மார்த்தமாகப் பழகியிருக்கிறார் என்பது கண்கூடாகத் தெரிந்தது, என் அம்மா dr ஐ ‘அண்ணா’ என்று அழைப்பார். அதற்கு என் பெரியம்மா சொல்வார், ‘உனக்கு முன்னாடியே அவர் எனக்கு அண்ணா டீ’ என்று. ‘உன் அண்ணா எனக்கும் அண்ணாதானே அக்கா’ என்பார் என் அம்மா. அதேபோல்தான் ஒவ்வொரு patients ம் அவரைத் தங்கள் உறவாக, தோழனாக, நினைத்திருக்கிறார்கள். அப்பாவும் dr என்பதையும் தாண்டி அப்படிப்பட்ட ஒரு உணர்வு ஏற்படும்படியே பழகியிருக்கிறார். பலரும் தங்களின் தனிப்பட்ட குடும்பப் பிரச்சனைகளை கூட Dr. இடம் சொல்லி ஆலோசனைகள் கேட்டுப்போவார்களாம்.
எங்கெங்கோ பெரிய hospital களில் treatment எடுத்துவிட்டு வந்தவர்கள் கூட ‘நம்ம டாக்டரைக் கூப்பிடு. அவர் கை பட்டா எல்லாம் சரியாகிடும்’ என்பார்கள். அப்படிப்பட்ட கைராசி டாக்டர் அவர். சிலர், முதலில் dr.சந்திரசேகரனிடம் காட்டி, அவர் மருந்துகள் prescribe செய்த பிறகு, சற்று பயந்து போய் வேறு பெரிய specialist களிடம் காட்டி, நிறைய செலவு செய்தபிறகு நம் dr. கொடுத்த மருந்தையே அந்த specialist ம் எழுதிக் கொடுத்ததாகவும் சொல்வார்கள்.
உடல்நிலை சரியில்லாதவர்கள் பக்கத்து கிராமங்களிலிருந்து மாட்டுவண்டி கட்டிக்கொண்டு வருவார்களாம். வந்து சேர இரவாகிவிடுமாம். அப்பா அவர்களுக்கு treatment தந்துவிட்டு, ‘இந்த ராத்திரில போகவேண்டாம்’ என்று சொல்லி படுத்துக்கொள்ள இடம் தருவாராம்.
TNEB ல் DIVISIONAL ENGINEER ஆக தஞ்சாவூரில் என் கணவர் பணியில் இருப்பதால், நாங்கள் இப்போது தஞ்சாவூரில் வசிக்கிறோம். கும்பகோணத்துக்கு அடிக்கடி போய் வருவோம். அப்போதெல்லாம் பார்க்கும் ஒவ்வொருவரும் ‘DR. இல்லாததுதான் ஒரு குறையா இருக்கு. கஷ்ட்டமா இருக்கு.’ என்று சொல்லி, இப்போது மற்ற டாக்டர்களிடம் போவதால் நடைமுறையில் உள்ள பல சிக்கல்களைச் சொல்லும் போது எங்களுக்கும் கஷ்ட்டமாக இருக்கும். ஆம். 2012ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி மாரடைப்பால் இயற்கை எய்திவிட்டார் அப்பா. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், செப்டம்பர் 17ம் தேதி வரை அவர் practice செய்துகொண்டிருந்தார். அதுவரை rs.10 தான் அவரது fees ஆக இருந்தது. சேவை மனப்பான்மை கொண்ட டாக்டராக அவர் வாழ்ந்தது பெருமையாக மட்டுமல்ல... எங்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறது.
  • டாக்டர்.S.சந்திரசேகரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக