வெள்ளி, 3 ஜூலை, 2020

தொழில் அல்லது பணி

'மத்யமர்' குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கங்கள். தேர்ந்த, திறமையான, அனுபவசாலிகளான, புத்திசாலிகளான, நேர்மையான, கடவுள் நம்பிக்கை கொண்ட பலரும் இந்தக் குழுவில் இணைந்திருப்பதும், நானும் அக் குழுவில் உள்ளேன் என்பதும் எனக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கிறது. என்னை இக் குழுவிறகு அறிமுகம் செய்து வைத்த என் மாமா திரு.சந்திரசேகரன் ஜெயராமன் அவர்களுக்கு என் முதல் நன்றி. என் மாமா, என்னையும், என் சகோதரி மாதங்கியையும் இந்தக் குழுவில் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தார். இது போல் பல குழுக்களுக்கான invite வந்த வண்ணம் இருப்பதால், முதலில் நான் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாதங்கிதான் முதலில் உள்ளே சென்று படித்திருக்கிறாள். 'நீயும் பாரு. எல்லாரும் ரொம்ப நன்னா எழுதறா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு' என்றாள். அவளுக்கு என் இரண்டாவது நன்றி. எதைப் படித்தாலும், யாருடைய post ஐப் பார்த்தாலும் அது ஒரு higher level என்பது எனக்கும் புரிந்தது. எத்தனை எத்தனை திறமைகள் எங்கெங்கெல்லாமோ ஒளிந்திருக்கின்றன! பார்க்கவே பிரமிப்பும், பரவசமும் ஏற்படுகிறது.
குரங்கு வந்து பழம் எடுத்துச்சென்ற சம்பவத்தை என் முதல் பதிவாகக் கொடுத்திருந்தேன். அதற்கே வரவேற்பு பலமாக இருந்தது. இந்த குழுவினர் அனைவரின் அலைவரிசை ஒரு மாதிரி இருப்பதை அது காட்டியது. இதோ எனது இரண்டாவது பதிப்பாக English poem ஒன்றை தமிழில் மொழிபெயர்த்துப் பதிந்துள்ளேன். தங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
'என்னைக் காதலி!'
என்னைக் காதலிப்பதாகக்
கூறிக்கொள்ளும் நீ- அதை
வெளிப்படுத்தத் தவறுகிறாய்.
அல்லது மறந்து போகிறாய்.
உன் சாப்பாட்டு மேஜையின்
உணவு முழுதுக்கும்
பொறுப்பாளி நான்தானே...!
உன் குடும்பத்தினர்
உடுக்கும் உடை முதல் - அவர்களின்
உடல் நலம் பேணல் வரை
நான்தானே பொறுப்பாளி!
பொறுப்பாளியான நான்
பொறுமையுடன் காத்திருக்கிறேன்.
எந்த அளவுக்கு நானுனக்கு அவசியம்?
என்றந்த உண்மையையை
என்றாவது நீ உணருவாயா என!
என்ன செய்யவேண்டும் நீ...?
'என் நலனே உன் நலன்' என்றுணர வேண்டும்.
என்னை மகிழ்வித்து திருப்தி செய்தால்
உன் திருப்தி உனக்கே சொந்தமாகும்!
நான் யாரென்று தெரிகிறது அல்லவா...?
நான்தான் ....
உன் வருமானத்திற்குக்
காரணமாய் இருக்கும்
நீ செய்துவரும்
'தொழில்' அல்லது 'பணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக