திங்கள், 13 ஜூலை, 2020

இலக்கண சந்தேகம்

எனக்கும் என் பெண்ணிற்கும் தமிழ் இலக்கணத்தில்  ஒரு சந்தேகம்.
அது ஒண்ணுமில்லங்க...
ஒரு ARTICLE எழுதிட்டிருந்தேன். அதுல
 'இது நடந்து பதினைந்து வருடங்கள் ஆகின்றன' அப்படீன்னு ஒரு வாக்கியம் வந்தது. என் மகள் சொன்னாள் 'இது' ன்னு SUBJECT SINGULAR ல வர்ரதுனால
 'இது நடந்து பதினைந்து வருடங்கள் ஆகிறது. ன்னு வரணும் என்றாள்.
'இது நடந்து ஒரு வருடம் ஆகிறது' அதே மாதிரி 'இது நடந்து பதினைந்து வருடங்கள் ஆகிறது' என்றாள்.

நான் சொன்னேன், 'இந்த இடத்துல 'வருடங்களைத்' தான் பாக்கணும். சரி... நான் வேற ஒரு உதாரணம் தரேன்.

'இவன் வந்து ஒரு வருடம் ஆகிறது
இவர்கள் வந்து ஒரு வருடம் ஆகின்றன'

என்று வருமா? வராதில்லையா? என்று சொன்னாலும், விளக்கம் எனக்குத் தெரியலை.

'ராமன் பழம் சாப்பிடுகிறான்'  என்பதில் ராமன் என்பது எழுவாய், பழம் என்பது செயப்படுபொருள், 'சாப்பிடுகிறான்' என்பது பயனிலை.
'இது நடந்து பதினைந்து வருடங்கள் ஆகின்றன' என்பதில் எழுவாய் எது?பயனிலை எது? செய்ப்படுபொருள் எது?

இது போன்ற வாக்கியத்தின் பெயர் என்ன?

மொழியில் புலமையும், தமிழில் தனியாக ஈடுபாடும் கொண்ட பலர் இருக்கும் இக்குழுவினர் எனக்கு விளக்குவீர்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக